7/3/13

இளம்பெண்ணைக் கற்பழித்த எட்டுப்பேர் கைதுபிரிட்டன் அருகே ஹெர்ட்ஃபோர்ட்ஷியரில்(Hertfordshire) பதினாறு வயது நிரம்பாத பெண்ணை கற்பழித்த எட்டு நபர்களை பொலிசார் புதன்கிழமையன்று கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாகக் குற்றவாளிகளைத் தேடிய பொலிசார் நியுஹாம்(Newham), ரெட்பிரிட்ஜ்(Redbridge), ஹேவரிங்( Havering) மற்றும் ஹெர்ட்ஃபோர்டு ஷயர் போன்ற இடங்களில் அலைந்து இவர்களைப் பிடித்துள்ளனர்.
குற்றம் சுமத்தப்பட்ட எட்டுப் பேரும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்பொழுது இந்த எட்டுப் பேரும் கிழக்கு இலண்டன் காவல்நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களால் பாலியல் கொடுமைகளுக்கான ஆளானவர்கள் வேறு எவரேனும் இருந்தால் அவர்கள் உடனே காவல்நிலையத்துக்கு வந்து முறையிடலாம் என்று தலைமை ஆய்வாளர் ஆடம் லோவ்(Adam Lowe)தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக