19/3/13

சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் சிக்கினர்


கனடா நாட்டு சிறையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் தப்பிய கைதிகள் மீண்டும் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் மான்ட்ரியல் நகர சிறையில் பெஞ்சமின் ஹூடோன்(வயது 36) டேனி புரொவிங்கல்(வயது 33) உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளநிலையில் சிறையிலிருந்து தப்பிக்க திட்டமிட்ட டேனி, தன் நண்பர்களை தொடர்பு கொண்டார்.
அதன்படி அவரது நண்பர்கள் கடந்த 17ம் திகதி, தனியார் சுற்றுலா ஹெலிகொப்டரை வாடகைக்கு அமர்த்தினர்.
விமானியை துப்பாக்கிமுனையில் மிரட்டி ஹெலிகொப்டரை சிறைக்கு மேலே பறக்குமாறு கட்டளையிட்டனர்.
சிறையில் தயாராய் இருந்த டேனி, பெஞ்சமினையும் தன்னுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். முதலில் தயங்கிய பெஞ்சமின் சிறையிலிருந்து தப்ப சம்மதித்தார். திட்டமிட்ட படி, ஹெலிகொப்டரிலிருந்து வீசப்பட்ட கயிறு ஏணியை பிடித்து ஏறி அவர்கள் தப்பி சென்றனர்.
பகல் நேரத்தில் பலர் முன்னிலையில் நடந்த இந்த துணிகர நிகழ்ச்சியை பார்த்த மற்ற கைதிகளும் பொலிசாரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், அருகில் உள்ள செயின்-ஜெரோம் நகரில் மறைந்திருந்த கைதிகளை கைது செய்தனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக