30/4/13

விண்வெளி சூரிய தகட்டில் விழுந்த ஓட்டை:?


அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து கடந்த 1998ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
பூமியில் இருந்து சுமார் 370 கி.மீற்றர் தொலைவில் சுற்றுவட்டத்தில் சுற்றி வருகின்ற இந்த விண்வெளி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்திருப்பதாக கனடா விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்டு கூறியுள்ளார்.
சமீபத்தில் விண்வெளி மையத்தை சுற்றி விண்வெளி நடை(ஸ்பேஸ் வாக்) மேற்கொண்டபோது, இந்த ஓட்டையை கண்டுபிடித்தாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டை விழுந்த இடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
விண்ணில் சுற்றி வருகின்ற எறிகல் மோதியதால் இந்த ஓட்டை விழுந்திருக்கலாம் என்றும், முக்கிய பாகங்களில் எறிகல் ஊடுருவியிருக்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விண்கற்களால் இந்த ஓட்டை ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும், மனிதர்களால் கைவிடப்பட்ட விண்வெளி குப்பைகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அரிசோனா பல்கலைக் கழக கோள்கள் ஆராய்ச்சியாளர் ஜிம் ஸ்காட்டி தெரிவித்துள்ளார்
 

28/4/13

குரு பெயர்ச்சி பலன்கள்! 2013 – 2014

திருக்கணித பஞ்சாங்கப்படி 31.05.2013 வைகாசி மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிஷப இராசியில் இருந்து, மிதுன இராசிக்கு சஞ்சாரம் செய்ய போகிறார். மிதுனத்தில் இருந்து துலா இராசி, தனுசு இராசி, கும்ப இராசியை, 5-7-9-ம் பார்வையாக பார்க்க இருக்கிறார்.

...இதனால், தற்போது துலாவில் இருக்கும் இரண்டு முக்கிய கிரகங்களான சனி மற்றும் இராகுவின் தீமைகளை சற்று குறைத்து, மக்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார்.

ஐ.டி. துறை, இரும்பு தொழில், வாசனை திரவியங்கள், ரியல் எஸ்டேட், எழுது பொருள் தொழில், ஜவுளி துறை, கட்டட உபகரணங்கள் ஆகிய இவை அனைத்தும் லாபம் பெரும்.

அன்னிய நாடுகள் வீண் விவகாரத்திற்கு வந்தாலும் அடங்கி விடுவர்.

பெரும் மழை, இயற்கை சீற்றங்கள் வர வாய்ப்புள்ளது. அரசியல் ஈடுபாடு உடையவர்களுக்கு சற்று சிரமமான நேரம். பிரச்னைகளை சமாளிக்க பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மை, தீமைகளை கலந்தே செய்வார்.

குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 31.5.2013 அன்று வெள்ளிக்கிழமை, ரிஷப இராசியில் இருந்து மிதுன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுனத்திற்கு போகும் குரு, 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்களை தருவார் என்று பார்ப்போம்…

16/4/13

தென்கொரியா மீது தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்


வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.  இது, வட கொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. வட கொரியா அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோபத்தின் கனல் வெளிப்பட்டது.
”தென் கொரியாவில் உள்ள பொம்மலாட்ட அதிகார வர்க்கத்தின் சார்பில் எங்களை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட பேரணி கண்டிக்கத்தக்கது. இந்த நேரத்தில் இருந்து, எவ்வித முன் எச்சரிக்கையும் விடுக்காமல், தென் கொரியா மீது எப்போது வேண்டுமானாலும் வட கொரியா அதிரடியாக தாக்குதல் நடத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சித்து வரும் வேளையில் வட கொரியாவின் இந்த அறிவிப்பு போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது

15/4/13

வேகமாக பனிக்கட்டிகள் உருகுகிறது!??


அண்டார்டிகாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.
அவுஸ்திரேலிய மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சி குழு இதனை கண்டுபிடித்து அறிவித்துள்ளது.
அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.
அண்டார்டிகாவின் வட முனைப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் ராஸ் தீவில் 1,197 அடிக்கு பனிக்கட்டிகளை டிரில் செய்து, குடைந்து இந்தப் பகுதியின் கடந்த கால வெப்பத்தையும் தற்போதைய வெப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது இந்த ஆராய்ச்சிக் குழு.
இதில் கடந்த 50 ஆண்டுகளில் தான் அண்டார்டிகாவில் பனி உருகுவது 10 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இது ஒட்டுமொத்தத்தில் பூமியின் வெப்பநிலை அதிகரித்து விட்டதையே உறுதிப்படுத்துகிறது என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான நெரில் ஆப்ராம்.
 

12/4/13

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


11/4/13

சூரியனை விட பெரிய கிரகம் கண்டுபிடிப்பு


ஐரோப்பிய வானவியலார் கண்டுபிடித்த ஒரு புதிய கிரகத்தை, ஜெனீவா பல்கலைக்கழகத்தினர் தொடர்ந்து ஆராய்ந்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதில் இந்தக் கிரகம் சூரியனை விடப் பன்மடங்கு பெரியதாகவும், ஒளி பொருந்தியதாகவும் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இன்டிகிரில்(INTEGRAL) கூறுகையில், பூமி இடம்பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டம் பற்றி மேலும் அறிய காமா கதிர்வீச்சுகளை ஆராய வேண்டும். கடந்த 2002ம் ஆண்டில் விஞ்ஞானிகள் முடிவெடுத்து அதன்படி செயல்பட்டு வந்தனர்.
தற்பொழுது NGC 4845 என்று பெயரிடப்பட்டுள்ள நட்சத்திரக் கூட்டத்தில் சூரியனைவிட மூன்று லட்சம் மடங்கு அடர்த்தி உடைய ஒரு கிரகம், கருப்புத் துளையினுள் ஒளிர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஒளி கிரகம் கடந்த முப்பதாண்டுகளாக செயலற்றுக் கிடந்தது.
தற்போது விழித்தெழுந்துள்ள கருப்புத்துளை நமது வியாழன் கிரகத்தைப் போல 15 மடங்கு பெரிய ஒரு பொருளை அத்துளையின் உள்ளே ஈர்த்துக்கொண்டுள்ளது. இந்த ஒளி கிரகம் 47 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது.
மேலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் இந்த ஒளிவெள்ளத்தை ராட்சதக் கிரகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 

10/4/13

: ஓட்டுநருக்கு தலை வெட்டி தண்டனை ?


சவுதி அரேபியாவை சேர்ந்த தலால்பின் பயஷ் அல்ஷெம்மாரி(40) என்பவர் கார் பந்தய போட்டியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாரதவிதமாக இவருடைய கார் உடன் போட்டியிட்டவர்களின் காரில் மோதியதில் அதில் இருந்த 3 பேர் அடிபட்டு இறந்துள்ளனர். இதனால் அவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நீதிமன்றம் அவரது தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து தலால்பின் பயசின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

8/4/13

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க,,,,

 நாம் செய்ய என்ன வேண்டும்?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
 1. வருமானம்
 2. ஒத்துழைப்பு
 3. மனித நேயம்
 4. பொழுதுபோக்கு
 5. ரசனை
 6. ஆரோக்கியம்
 7. மனப்பக்குவம்
 8. சேமிப்பு
 9. கூட்டு முயற்சி
 10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
 3. கோபப்படக்கூடாது.
 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
 5. பலர் முன் திட்டக்கூடாது.
 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
 10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
 11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
 12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
 14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
 16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
 17. ஒளிவு மறைவு கூடாது.
 18. மனைவியை நம்ப வேண்டும்.
 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
 21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
 22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
 27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
 29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
 34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
 2. காலையில் முன் எழுந்திருத்தல்.
 3. எப்போதும் சிரித்த முகம்.
 4. நேரம் பாராது உபசரித்தல்.
 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
 8. அதிகாரம் பணணக் கூடாது.
 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
 11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
 13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
 20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
 24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
 25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
 4. விரும்பியதைப் பெற இயலாமை.
 5. ஒருவரையொருவர் நம்பாமை.
 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
 9. விருந்தினர் குறைவு.
 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

7/4/13

அறிமுகமாகின்றது GoNote Mini Netbook ,.,


அறிமுகமாகின்றது GoNote Mini Netbook
Ergo Electronics எனும் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான GoNote Mini Netbook எனும் கணனிச் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது.
7 அங்குல அளவுடையதும் 800 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனமாது 1.2 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Rockchip RK2918 ARM Cortex-A8 Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதோடு கூகுளின் Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.{காணொளி, }
 
மேலும் இவற்றில் 4GB சேமிப்பு வசதி தரப்பட்டுள்ளதுடன் 3000mAh பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது. இச்சாதனத்தின் அளவானது 7.9″ x 4.7″ x 0.9″ ஆகவும் நிறையானது 1.5 பவுண்ட் ஆகவும் காணப்படுகின்றது. அத்துடன் இதன் விலை 99 அமெரிக்க டொலர்களாகும்.

6/4/13

நாட்டில் எல்லோரும் இப்படி இல்லைஇது யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை.சில பேர் மட்டும் தான் ஆடம்பரக்கதவுகளோரம் & வெளிநாடு

வெளிநாடு வாழ்க் கையின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சி மட்டும் தான்.,,,¨[,காணொளி,}
 

.

5/4/13

ஹிட்லர் உருவில் மெர்கெல்: ஜேர்மானியர் கொதிப்பு


ஐரோப்பாவில் திவாலான கிரேக்க நாடும், சைபரஸ் நாடும் தங்களது சிக்கன நடவடிக்கையை தீவிரமாக்கினால் மட்டுமே அந்நாடுகளின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பிணையநிதி வழங்க முடியும் என்று ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் வற்புறுத்தி வருகிறார்.
இவரது சிக்கன நடவடிக்கையால் அவதிப்படும் கிரேக்கரும், சைப்ரஸ் நாட்டினரும் இவரை ஹிட்லராகச் சித்தரிக்கின்றனர். இது கண்டு ஜேர்மானியர் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஹிட்லரிடம் இருந்து வந்த சர்வாதிகார மனப்போக்கு இவரிடமும் இருப்பதாக அந்த இரு நாட்டு மக்களும் கருதுகின்றனர்.
கிரீஸ் மற்றும் சைப்ரஸ் நாடுகளின் தெருக்களில் ஹிட்லர் மீசையுடன் மெர்கெல் முகம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தத் தெருக்களின் வழியே அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக மக்கள் ஊர்வலம் நடத்தினர்.
கிரேக்கரும், சைப்ரசும் செலவை குறைக்காவிட்டால் நிதி நெருக்கடியில் இருந்து மீள முயலாது என்று மெர்கெல் மற்றும் மற்ற பணக்கார நாடுகளும் நம்புகின்றது.
கிரேக்கர், சைப்ரஸ் விமர்சன படங்கள் குறித்து ஜேர்மானியரிடம் கருத்துக் கேட்டபோது 79 சதவீதம் பேர் இந்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாக ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது

4/4/13

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின ,,,


பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் வடகிழக்கே உள்ள கடலில் 38 கி.மீ. ஆழத்தில் இன்று காலை 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என்றும் அமெரிக்க புவியியல் வானிலை‌ மையம் இத்தகவலை தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. எனினும் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது
 

3/4/13

அழிந்து வருகின்றது ஆண்கள் இனம்: ஓர் அதிர்ச்சித் தகவல் ,.,


உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை என்றாலும் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்.
அதாவது உலகிலிருந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாம். பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியாக இருக்க முடியாது.
ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தத் தகவலை பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ் என்ற பெண் விஞ்ஞானியே கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், உலகின் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பை அடைந்துள்ளன. அதில் ஒன்றாக ஆண் இனமும் சேர்ந்திருப்பது அதிர்ச்சியான தகவலாகும்.
பொதுவாக பெண் பாலினத்தை நிர்ணயிப்பது எக்ஸ் குரோமோசம்கள் ஆகும். இதில் ஒரு குரோமோசோமில் 1000 ஜீன்கள் இருக்கும். அதேபோல ஆண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோமிலும், ஆரம்பத்தில் ஒரு குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் இருந்திருக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய ஆண்களின் குரோமோசோமில் ஏறத்தாழ 100 ஜீன்கள் வரை குறைந்துள்ளது. அதில் முக்கியமான ஜீன் எஸ்ஆர்ஒய் ஜீனும் அடக்கம். Male master switch என்று அழைக்கப்படும் இந்த ஜீன்தான் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஜீன் ஆகும்.
தற்போதைய பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரு ஒய் குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதை அறியலாம்.
இருப்பினும் ஆண் இனம் முழுமையாக அழிவதற்கு 50 லட்சம் ஆண்டுகள் பிடிக்குமாம். அதுவரை பிரச்சனை இல்லை என்கிறார் ஜென்னி கிரேவ்ஸ்.
தற்போது சேகரிக்கும் டைனோசரஸ் முட்டை மாதிரி, ஆண் விந்தணுவை சேகரித்து வைக்கும் வங்கிகள் அதிகமாகலாம். இல்லையென்றால் அறிவியல் இன்னும் பல நினைத்துப் பார்க்க இயலாத கண்டுபிடிப்புகளைத் தரலாம். எனவே இது கவலைத் தரவேண்டிய விடயமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

2/4/13

தங்கத்தை கடத்தி மௌன விரத நாடகமாடிய இருவர்வாயில் தங்க பிஸ்கட்டை கடத்தி மௌன விரதம் என்று நாடகமாடிய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வாயில் ரூ.13.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை இருவர் கடத்தி வந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று இரவு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது.
அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை பொலிசார் கண்காணித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு 2 பயணிகள் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த 2 பேரையும் அழைத்து பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை கேட்டதுடன் சில கேள்விகளும் கேட்டனர்.
அதற்கு அந்த 2 பேரும் எந்த பதிலும் அளிக்காமல் ஒரு துண்டு சீட்டில் நாங்கள் இன்று மவுன விரதம் என்று எழுதி காட்டினர். இதையடுத்து பொலிசார் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக வாயைத் திறந்தனர்.
அப்போது ஒருவரின் வாயில் இருந்து 225 கிராம் தங்க பிஸ்கட்டும் மற்றொருவரின் வாயில் இருந்து 200 கிராம் தங்க பிஸ்கட்டும் வந்து விழுந்தன. அதன் மதிப்பு ரூ.13.5 லட்சம் ஆகும்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கண்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(53) மற்றும் முகமது இஷாத்(47) என்பது தெரிய வந்தது. அவர்கள் யாருக்காக தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தனர் என்பது குறித்து விசராணை நடந்து வருகிறது.