அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து கடந்த 1998ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
பூமியில் இருந்து சுமார் 370 கி.மீற்றர் தொலைவில் சுற்றுவட்டத்தில் சுற்றி வருகின்ற இந்த விண்வெளி நிலையம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சூரிய ஒளி தகட்டில் ஓட்டை விழுந்திருப்பதாக கனடா விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்டு கூறியுள்ளார்.
சமீபத்தில் விண்வெளி மையத்தை சுற்றி விண்வெளி நடை(ஸ்பேஸ் வாக்) மேற்கொண்டபோது, இந்த ஓட்டையை கண்டுபிடித்தாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஓட்டை விழுந்த இடத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
விண்ணில் சுற்றி வருகின்ற எறிகல் மோதியதால் இந்த ஓட்டை விழுந்திருக்கலாம் என்றும், முக்கிய பாகங்களில் எறிகல் ஊடுருவியிருக்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விண்கற்களால் இந்த ஓட்டை ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும், மனிதர்களால் கைவிடப்பட்ட விண்வெளி குப்பைகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அரிசோனா பல்கலைக் கழக கோள்கள் ஆராய்ச்சியாளர் ஜிம் ஸ்காட்டி தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக