15/3/13

வளர்ந்த நாடுகளின் டாப் 10 வரிசையிலிருந்து கனடா ,,,


கடந்த 1990ம் ஆண்டு முதல், வளர்ந்த நாடுகளின் வரிசையில் பத்து இடங்களுக்குள் இருந்து வந்த கனடா இன்று பதினோராம் இடத்துக்கு இறங்கிவிட்டது என்று ஐ.நாவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
சுகாதாரம், கல்வி, வருமானம் ஆகிய துறைகளில் கனடா 11ம் இடத்திலும், ஆண் பெண் பேதம் பார்ப்பதில் 18வது இடத்திலும் உள்ளது என்று ஐ.நாவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐ.நாவின் மேம்பாட்டுத் திட்டம் தெற்கின் எழுச்சி என்ற தலைப்புடன் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலக அளவில் தென்பகுதியிலுள்ள நாடுகளில் பொருளாதார எழுச்சியை விளக்கியுள்ளது.
மேலும் ஐ.நா மேம்பாட்டுத் திட்டம் வளர்ந்துவரும் நாடுகளின் முக்கிய மூன்று அம்சங்களை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முதலாவதாக தென்பகுதியிலுள்ள நாடுகள் தங்களின் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்குத் தேவையான மேம்பாட்டுக் கொள்கைகளை வகுக்கும்பொழுது அவற்றின் பயன்பாடு மற்றும் செயற்பாடு குறித்து அதிகம் கவனம் செலுத்துகிறது.
இரண்டாவதாக இந்தத் தெற்கு நாடுகள் உலகச் சந்தைக்கு பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்தன. மூன்றாவதாக சமூக நலத் திட்டங்களில் முதலீடு செய்கின்றன.
எனவே தெற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கும் வகையில் சா்வேதச நிறுவனங்கள் தனது விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று ஐ.நா வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக