தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது:
கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாலமானது, தேயிலை மடுவத்தை அண்மித்து உள்ளமையினால், அதில் வரிசையாக சென்றே சம்பள நிலுவை, தேயிலை தூள் என்பவற்றை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். கோப்பி பயிற்செய்கை காலத்தில் அமைக்கப்பட்ட இப்பாலத்தின் இரும்பு தூண்கள் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளன.
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம் தேயிலைத் தூள் பக்கற்றுகள் வாங்குவதற்காக பாலத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது, பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயங்களுக்கு உள்ளாகிய 10ற்கும் மேற்பட்ட மக்கள் தலவாக்கலை லிந்துல பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்