28/10/13

தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர் நீர்வீழ்ச்சியில்


தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர்  நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.

ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன்.

சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்கள். தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன.

இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார் ரீகன். தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகனை உறவினர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.

தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது. ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் வந்து நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகனின் உயிரற்ற உடல் கிடைத்தது. ஈழத் தமிழர் ஒருவர் தேனிலவுக்காக வந்த இடத்தில் நீரில் விழுந்து பலியான தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர்

சங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ரீகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

23/10/13

வித்தியாச நடனம் நிகழ்வில் பார்வையாளர்களை கவர்ந்த "


 
கனடியத் தமிழர் மத்தியில் நடத்தப்படும் நிகழ்வு எதுவாயினும் இசை , நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமையான ஒன்று தான். இதுவரை நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலுமே நம் பாரம்பரிய நடனமான பரத

நாட்டியத்திற்கும் , தமிழ் திரையுலகப் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த முறையைத் தவிர்த்து முழுமையான வர்த்தகத் திருவிழாவாக க்டந்த ஆண்டு நடைபெற்ற " Taste Of Online marketing " நிகழ்வில் இணைய

சந்தைப்படுத்துதல் குறித்து நிரோதினி பரராஜசிங்கம் மாணவர்களின் வித்தியாசமான நடனம் விழாவிற்கு வந்திருந்தோர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இணைய விளம்பர யுக்தியில் இறங்கியுள்ள முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் , யூ-ரியூப் , கூகிள் ஆகிய அனைத்தும் தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் என்ற குடையின் கீழ் வருவது போன்று சித்தரிக்கப்பட்டு இதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகளுடன் நடனமாடினர்

 நாட்டிய நிகழ்விற்கென பிரத்யேக இசையமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமூட்டுவதாய் அமைந்தது. மொத்தத்தில் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாய் அமைந்திருந்தது இந்நாட்டிய நிகழ்வு.

18/10/13

கடைக்கு சிசுவின் சடலத்துடன் வந்த இளம்பெண்


அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இப்பகுதியில், திருடர்களை கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்கள் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பையிலிருந்து துர்நாற்றம் வரவே, பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, ஒரு பெண்ணின் பையில் பச்சிளம் சிசு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ந்து போயினர்.

அந்தப் பெண்களில் ஒருவர், ஒருநாள் முன்னதாகத்தான் இதனைப் பிரசவித்ததாகவும், அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு கையில் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
அந்தக் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா? என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.

அவர் கொடுத்த முகவரியில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
மற்றொரு பெண் கொடுத்த முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை.

இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரசவித்ததாகக் கூறப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது பையில் இருந்த சிசுவின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறப்பிற்கான காரணம் தெரிந்தபின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 

3/10/13

நாம்உண்ணும்உணவால் உண்டாகும் உடல் மாற்றம்


   உணவு 35 வயதாகும் உங்களைப் பார்த்து யாராவது ‘உங்களுக்கென்ன 40 வயசிருக்குமா’ எனக் கேட்டால் எப்படிப் பதறிப் போவீர்கள்? உண்மையான வயதை நிரூபிக்க எப்படியெல்லாம் தவிப்பீர்கள்? ‘என்னைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டாங்களே…’ என எத்தனை நாள்கள் தூக்கமின்றி மாய்ந்து போவீர்கள்? அதே நியாயம்தானே உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும்..? 8 வயதுப் பெண்குழந்தை 12 வயதுக்கான வளர்ச்சியுடன்

நின்றால்? 10 வயது ஆண் குழந்தை, பூனைமுடி மீசையுடன் நெடுநெடுவென உயர்ந்து நின்றால்? ‘அவ அப்படியே அவங்கப்பாவை மாதிரி… அதான் கிடுகிடுன்னு வளர்ந்துட்டா’ என்றும், ‘ஆம்பிளைப் பசங்க இப்படித்தான்… சீக்கிரம் வளர்ந்துடுதுங்க’ என்றும் ஏன் சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்?
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் ரொம்பவே பாவம்! பின்னே… பிறந்தது

 முதல் 12 வயது வரை அனுபவிக்க வேண்டிய மழலைப்பருவத்தை வெகு சீக்கிரம் தொலைத்துவிட்டு, வேக வேகமாக பதின்ம வயதுக்குள் தள்ளப்படுகிற அவர்கள் பாவம்தானே? மழலையைத் தொலைத்துவிட்டு, மளமளவென அதிகரிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முழுக்காரணம் அவர்களது உணவுப்பழக்கம்! ஊட்டத்தின் அடிப்படையில் உணவுகளைத் தேர்ந்தெடுக்காமல், சுவையின் அடிப்படையில் சாப்பிட்டுப் பழகியதன் விளைவு!

13 வயதின் தொடக்கத்தைத்தான் டீன் ஏஜ் என்கிறோம். இன்றோ பெண் குழந்தைகளும் சரி, ஆண் குழந்தைகளும் சரி, அதற்கு முன்பாகவே டீன் ஏஜின் மாறுதல்களை உணர்கிறார்கள். பெண் குழந்தைகள் 8, 9 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கோ 10 வயதுக்கு முன்பே குரல் உடைகிறது… முகப்பரு வருகிறது… மீசை அரும்புகிறது.
பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும், ஆண் பிள்ளைகளுக்கு ஆன்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும்

கொடுப்பதன்பிரதிபலன்கள்தான் எல்லாம்.  25 வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் முடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு 35 அல்லது 37 வயதாகும் போது, 10 வயதில் மகனோ, மகளோ இருப்பார்கள். 35க்குப் பிறகு பல பெற்றோருக்கும் உணர்வு நரம்புகள் பலவீனமடைகின்றன. செத்துப்போன நாக்கு, காரசாரமாகக் கேட்கிறது. தமது தேவைக்காக அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர்,

அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன

.சரி… இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? உணவுமுறை மாற்றம் மட்டுமே! காலை உணவுக்கு வாரம் இருமுறை வெறும் பழங்களைக் கொடுத்துப் பழக்குங்கள். மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்து, பருப்பு மற்றும் பழம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இரவு உணவு 8 மணிக்குள் முடியட்டும். அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, புதினா

சேர்த்தரைத்த சட்னி கட்டாயம் இடம் பெறட்டும். இரவில் பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை! உங்கள் குழந்தை சராசரியைவிடக் குறைவான எடையுடன் இருந்தால் மட்டுமே பால் தரலாம். சாதாரண எடை இருந்தால் பால் தேவையில்லை. குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே கொடுங்கள். 90 சதவிகிதம் சைவ

உணவாகவே இருக்கட்டும். நிறைய தண்ணீர் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நாளொன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பிள்ளைகளுக்கு துரித உணவு மோகம் குறைவது நிச்சயம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீர் இன்னும் உன்னதம். கரிசலாங்கண்ணிக் கீரை அடை, உணவுப் பொடி, சிவப்பு அவல் உப்புமா இவை
குழந்தைளுக்கு ,அவசியம்

அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர், அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். இதனால் பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன.

கேரள மக்கள் கல்வியறிவிலும் கலைத்திறன்களிலும் முன்னணி வகிக்க, அவர்கள் தினசரி எடுத்துக்கொள்கிற சீரகத் தண்ணீரும் ஒரு வகையில் காரணம். நுட்ப உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை மேம்படுத்தும் சக்தி அதற்கு உண்டு என்றால் நம்புவீர்களா? பிஞ்சிலே பழுக்க வைக்கிற பாவச் செயலை உணர்ந்து, இனியாவது குழந்தைகளுக்கு முழுமையான மழலைப் பருவத்தை அனுபவிக்கிற சுதந்திரத்தைக் கொடுங்கள் பெற்றோர்களே..!