26/6/13

மெதுவாக சாலையை கடந்தவருக்கு அபராதம்:??


அவுஸ்திரேலியாவில் மெதுவாக சாலையை கடந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த ஜேம்ஸ் கிளாசென்(வயது 33) என்பவர், கடந்தாண்டு மார்ச் மாதம் அடிலெய்டு வந்தார்.
அங்குள்ள சாலையை மெதுவாக கடந்ததாக பொலிசார் ஜேம்ஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று அடிலெய்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுபோன்ற வழக்கை பதிவு செய்ததற்காக பொலிசாரை கண்டித்த நீதிபதி, இவர் என்ன தவறு செய்து விட்டார்? இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
உடனே வழக்கை வாபஸ் பெற்று கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருப்பினும் சாலையை மெதுவாக கடந்த குற்றத்திற்காக ஜேம்சுக்கு 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
 

16/6/13

மணிவண்ணன் மரணம்



திரையுலகம் அதிர்ச்சி! இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.
கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா.
பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம்.
ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.
மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்

15/6/13

மணிவண்ணன் மரணம்: நாம் தமிழர் அஞ்சலி

பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றி கோபுரங்கள் சாய்வதில்லை படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து கடந்த மாதத்தில் தனது 50வது படமாக நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏவை இயக்கிய இயக்குனர் மணிவண்ணன் இன்று இயற்கை எய்தினார்.
 தமிழ்சினிமாவின் தலைசிறந்த ஒரு கோபுரம் சாய்ந்திருக்கிறது என்று சொன்னால் அதுமிகையாது. ஆனாலும் இவர் இயக்கிய படங்கள் நிச்சயம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைப்படங்கள் இயக்க வருபவர்களுக்கும் என்றும் சாயாத கலங்கரைவிளக்கக் கோபுரங்களாத் திகழும் என்பதில் ஐயமில்லை. பாரதிராஜாவின் பலபடங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றிய இயக்குனர் மணிவண்ணனை தனது கொடிபறக்குது படம் மூலம் நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் இமயம் பாரதிராஜா

10/6/13

செக்ஸ் தொழிலாளியின் மகளுக்கு கிடைத்த அதிர் ஷ்டம்


மும்பையை சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாட்டிபுராவைச் சேர்ந்தவர் ஸ்வேதா(வயது 18).
இவரின் தாத்தா பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார்.
இதில் விரும்பமின்றி ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று, தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
எனினும் சூழ்நிலையின் காரணமாக அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் குழந்தையை பெற்றெடுத்து நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின் பாலியல் தொழிலையும் கைவிட்டார்.
இருப்பினும் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில் ஸ்வேதாவும் பல ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று ஓராண்டு காலம் படிப்பை தொடராமல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கும், நேபாள நாட்டின் மலை வாழ் மக்களிடமும் சென்று அங்குள்ள சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இவரது சிறந்த பணிகளை பாராட்டி அமெரிக்காவில் உள்ள போர்டு கல்லூரி கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும் ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் படி ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைப்பதுடன், 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டையும் இலவசமாக வழங்கியுள்ளது
 

3/6/13

யார்மனதையும் புண் படுத்துவதற்கு இல்லை

மிருகம் காட்டுக்குள்ளே மனிதத்தன்மையுடன் மனிதன் நாட்டுக்குள்ளேமிருகத்தன்மையுடன்விலங்குகள் விலங்குகளுக்கு குழிபறிப்பதில்லை மனிதன் மனிதனுக்கு குழிபறிக்கிறன் ,விலங்குகளே வழிவிடுங்கள் மனிதன் காட்டுக்குள்ளே வருகிறான்,{காணொளி} ,