23/2/13

கனடாவில் பனிச்சரிவில் சிக்கிய மூவரில் ஒருவர் மரணம்


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதில் மூவரும் பனிச்சரிவில் சிக்கிகொண்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மலைப்பகுதியில் ஏற்படும் இந்த பனிச்சரிவை தடுப்பதற்கு குவிந்திருந்த பனியை அகற்றினால் மட்டுமே அங்கு மக்கள் தமது அன்றாடப்பணிகளை நடத்தமுடியும்
 

22/2/13

புகலிடம் நாடி வரும் ரோமா இனத்தவரைக் குறைக்கும்புதிய கடுமையான சட்டங்கள் ,கனடாவுக்கு அகதிகளாக வந்து தங்குவோரின் எண்ணிக்கையை அந்நாட்டின் புதிய சட்டங்கள் குறைத்து விடுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒரு காலத்தில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ரோமா இனத்தவருக்குப் புகலிடமாக இருந்த கனடா இன்று ஒட்டவாத் திட்டம்(Ottawa’s plan) போன்ற பல்வேறு சீர்திருத்தங்களாலும், புதிய சட்டங்களாலும் அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது.
கனடாவின் புதிய புலம்பெயர்வுச் சட்டங்கள் குறித்து சட்டதரனி சாந்தால் தெஸ்லோகெஸ்(Chantal Desloges) கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டில் ஹங்கேயினர் 415பேரும், 2011ம் ஆண்டில் 374 பேரும், 2012ம் ஆண்டில் 353 பேரும் அகதி நிலை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஏழு ஹங்கேரியினர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அகதிநிலை கேட்டு வரும் விண்ணப்பங்கள் 70 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
அரசுத் தரப்பினர் இதற்கு பதிலளிக்கையில், போலி அகதிகளைத் தடுக்கவே ஒட்டவாத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகமானதாகவும் மேலும் இச்சீர்திருத்தங்கள் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அகதி நிலை வேண்டி விண்ணப்பித்தவர்களின் உண்மை நிலையை அறிய 2 பில்லியன் டொலர் வரை அரசு செலவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினர்
 

18/2/13

குறைந்த விலைக்கு விற்கப்படும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் ,,,


சூரிச்சில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் குறைந்து வருவதால் கட்டிடங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக விற்பனை நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்
இரண்டு வருடத்திற்கு முன்னர் மொபிமோ(Mobimo) என்ற நிர்வனம் மொபிமோ என்ற ஒரு ஆடம்பர கட்டிடம் ஒன்றை கட்டத் தொடங்கியது. இவை 15 மாடி கொண்ட மிகவும் ஆரம்பரமான கட்டிடம் ஆகும்.
மக்களால் தங்க பூமி என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு 1 சதுர அடி 25,000 ஃபிராங்க் மதிப்பாக இருந்ததது. தற்பொழுது இரண்டு வருடத்திற்கு பிறகு கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பிறகு இதன் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.
இதே போன்று லாசர் என்ற இடத்திலும் நிறைய ஆடம்பர கட்டிடங்கள் மிகவும் மலிவான விலைக்கே விற்கப்படுகிறது. வீழ்ச்சியடைந்த பொருளதாரமும், குறைந்துள்ள பணத்தின் மதிப்பே இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் என கருதப்படுகின்றது.
இதனால் மக்கள் கட்டிடங்களின் முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்
 

17/2/13

இராட்சத விண்கல் பூமியில் விழாமல்,,,

  
சென்றது! தப்பியது பூமி!ரஷ்யாவின் யூரல் மாநிலத்தில் விண்கல் வெடித்துச் சிதறியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இதில் 200 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவில் விண்கல் வெடித்துச் சிதறிய போது கால்பந்து மைதானம் போல் காட்சி தரும் ஆஸ்ட்ராய்ட் 2012 டி.ஏ.14 என்ற பாரிய விண்கல் பூமிக்கருகே பூமியை கடந்து சென்றுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியை தாக்கும் என பலரும் கூறியதுடன் தொலை தொடர் புகள் அனைத்தும் சிதைந்து விடும் என்றும் எச்சரித்திருந்தனர். ரஷ்யாவில் விழுந்த எரிகல்லும், மேற்படிஎரிகல்லும் இரண்டும் எதிர்திசைகளில் பயணித்துள்ளன.
பூமியை கடந்து சென்ற விண்கல் அமெரிக்க பகுதிகளில் தென்படவில்லை. எனினும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தொலைநோக்கி மூலம் பார்த்துள்ளனர்.
பூமியை விண்கல் கடந்து சென்றதால் தப்பியது பூமி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எரிகல் பறந்து சென்றதில் உடைந்த ஜன்னல் கண்ணாடி சிதறல்கள் பட்டு பலர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து உலக மக்கள் மீள்வதற்குள், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் கூறினர்.
வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மத்திய ரஷ்யாவின் யூரல் மலைப்பிரதேச பகுதியில் பிரமாண்ட எரிகல் தகதகவென எரிந்தபடி மிக மிக அருகில் பறந்து சென்றது. அந்த கல் வெடித்து சிதறியதில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. எரிகல் தீ ஜுவாலையுடன் பறந்த போது திடீரென சாலைகளில் கருமேகம் சூழ்ந்தது போலவும், திடீரென வானில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சியது போலவும் காணப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

14/2/13

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்


வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
 

13/2/13

தினம்தோறும் கோலா குடித்ததால் நியூசிலாந்து பெண் மரணம்,,,


கோலா நிறுவனம் கைவிரிப்பு ,நியூசிலாந்தில் ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கொக்கா கோலா குடித்து வந்த 30 வயதுடைய பெண்மணியான நட்டாஷா ஹாரிஸ் என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இருதய நோயால் மரணமடைந்தார்.

இம் மரணத்துக்கான உண்மையன காரணம் இவர் அதிகளவு கொக்கா கோலா உட்கொண்டமையே என இப் பெண்மணியின் உடலைப் பரிசோதித்த பிரேத பரிசோதகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதாவது மனித உடலில் சேரக் கூடிய காஃபின் (Caffeine) ஐ விட இரு மடங்கும், நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை அளவை விட 11 மடங்கும் இவர் உடலில் சேர்ந்தமையாலேயே இருதயப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 8 பிள்ளைகளின் தாயான இவர் உடல் நலக் குறைவால் பல வருடங்களாகப் பாதிக்கப் பட்டிருந்தார். இவரின் மரணத்துக்குப் பின்னர் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது, ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கோலா குடித்ததால் அவரது உடலில் 1Kg சர்க்கரையும், 970mg caffeine உம் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .

இந்நிலையில் கொக்கோ கோலா நிறுவனம் சமீபத்தில் தனது உற்பத்தியான கோலா தான ஹாரிஸ் இன் மரணத்துக்குக் காரணம் என யாராலும் 100% வீதம் நிரூபிக்க முடியாது என மறுப்புரை தெரிவித்துள்ளது. மேலும் தனது பானத்தை அளவுக்கதிகமாக உட்கொண்டு அதற்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புக்குத் தனது நிறுவனம் பொறுப்பாக முடியாது எனவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது எனவும் தடாலடியாகத் தெரிவித்துள்ளது

11/2/13

பிரிட்டிஷ் பாடகி அடெலெக்கு கிராமி விருது(


அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகரில் 55ம் ஆண்டு கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. கிராமிய விருது பெற்றவர்களின் விபரம்: இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக டெய்லர் ஸ்விஃப்ட் பாடிய We are never ever getting bake together என்ற பாடல் இடம்பெற்றது. இதை தொடர்ந்து பாப் இசைப்பாடகி அடெலே(Adele)தனது set fire rain என்ற பாடலுக்கு கிராமி விருது பெற்றார். மம்ஃபோர்டு மற்றும் ஸன்ஸ்(Mumford&Sons) என்ற இசைக்குழு தன்னுடைய பாட்டுத்தொகுப்புக்காக கிராமி விருது பெற்றுள்ளது. பால் மெக்கார்ட்னி(Paul McCartney) தனது 15 ஆவது கிராமி விருதை இந்த ஆண்டு பெற்றுள்ளார். The Beach boys என்ற இசைக்குழு முதன்முதலாக கிராமி விருது பெற்றது. இவ்விருது இவர்களின் The Smile sessions என்ற பாடலுக்காகக் கிடைத்துள்ளது. பாப் ராக் இசைக்குழுவான FUN இந்த ஆண்டு We are young என்ற பாடலுக்காக கிராமி விருது பெற்றுள்ளது. மேலும் ஜான் மற்றும் ஷீரோன் The A Team என்ற பாடலைப் இவ்விழாவில் பாடிப் பார்வையாளரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர்,[காணொளி ]

10/2/13

சுவிஸ் சொக்லேட் விற்பனையில் சரிவு


சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டின் சொக்லேட் விற்பனை 4000 தொன் குறைந்திருந்ததாக சாக்கோஸ் விஸ்(Chocosuisse)என்ற நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுவிஸ் ஃபிராங்க் மதிப்பில் மாற்றம் ஏற்படாததாலும் மற்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட பொருளதார நெருக்கடி காரணமாவும் சொக்லேட் விலையின் உயர்வை தவிர்க்க இயலாததாயிற்று. இதனால் சொக்லேட் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் சுவிஸ் சொக்லேட்டின் ஏற்றுமதி 1,03,897 தொன்னாக குறைந்ததால் அதன் விற்பனையும் கடந்த வருடம் 2.2 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திடமிருந்து மிக அதிகமான சொக்லேட் இறக்குமதி செய்யும் ஜேர்மனி, இந்த ஆண்டில் தனது இறக்குமதி அளவைக் குறைத்துக் கொண்டது. இதற்கு அடுத்தபடியாக பிரிட்டன், பெல்ஜியம், சீனா, பஃஹ்ரேன், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் தங்களின் இறக்குமதியின் அளவைக் குறைத்துக் கொண்டது

9/2/13

ஏலத்திற்கு வரும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் சர்ச்சிலின்


பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கவிதை ஏலம் விடப்பட உள்ளது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு நாவல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். மேலும், கடந்த 1953ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் எழுதிய கவிதை ஒன்று பிரிட்டனில் ஏலம் விடப்பட உள்ளது. கடந்த, 1898ல் ராணுவத்தில் பணிபுரிந்த போது அவர் எழுதிய கவிதை 12 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. வரும், ஏப்ரலில் ஏலத்துக்கு வரும் இக்கவிதை இரண்டு பக்கத்துக்கு எழுதப்பட்டு சர்ச்சிலால் கையொப்பமிடப்பட்டிருக்கிறது

8/2/13

அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்: இதுவரை 94 பேர் பலி


இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக்காய்ச்சல்(swine flu) தொற்று நோயினால் 94 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில், சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மோசமான குளிர்காலநிலையே பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருகின்றமைக்கு காரணம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான எச்1 என்1 வைரஸ் தொற்று முதன்முதலில் 2009-ம் ஆண்டில் மெக்சிக்கோவிலேயே கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகெங்கிலும் வேகமாக பரவியது. இந்தியாவில் கடந்த 2009-ம் ஆண்டில் 981 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். கடந்த 2010-ம் ஆண்டில் 1,763 பேரும் 2011-ம் ஆண்டில் 75 பேரும் கடந்த ஆண்டில் 405 பேரும் உயிரிழந்தார்கள். இந்த வைரஸினால் உலகெங்கிலும் சுமார் 2 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் 246 நோயாளிகள் இனங்காணப்பட்டனர், அவர்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 60-க்கும் அதிகமான நோயாளிகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. நோய் அறிகுறிகள் எச்1 என்1 வைரஸ் ஆரம்பத்தில் பன்றிகளிடத்திலிருந்தே உருவாகியதாக கண்டறியப்பட்டாலும் இப்போது அந்த நோய் முழுமையாக மனிதர்களைத் தாக்கும் நோயாக மாறியுள்ளது. பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெல்லியில் 5 தனியார் மருத்துவமனைகள் அடங்கலாக 22 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எச்1 என்1 நோய்க் கிருமி ஆரம்பத்தில் பன்றிகளிடத்திலிருந்தே பரவியதாகக் கண்றியப்பட்டாலும், இப்போது முழுமையாக மனிதர்களைத் தாக்கும் நோயாகவே மாறிவிட்டது. தும்மல் மற்றும் இருமல் மூலம் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடிய இந்த நோயினை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்கமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வழமையான காய்ச்சலைப் போலவே, அதிகரித்த உடல் வெப்பம், இருமல், தொண்டை நோய், உடல் வலி, குளிர் நடுக்கம் போன்றவையே பன்றிக் காய்ச்சலுக்கும் நோய் அறிகுறிகள். சிலருக்கு தலைச்சுற்று, வாந்திபேதி போன்ற அறிகுறிகளும் காணப்படும். பொதுவாக கர்ப்பிணித் தாய்மாரும், குழந்தைகளும், இருதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட முதியோரும் இந்த நோய் அறிகுறிகள் தொடர்பில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய் பரவல் குறித்து 'மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை' என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

7/2/13

கடிகார உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் கடிகார உற்பத்தியாளர்கள், கடந்த வருடம் 24 மில்லியன் ஃபிராங்க் விற்றதை விட இந்த வருடம் கூடுதலாக 11 % விற்றுள்ளனர். இத்தகவலை சுவிஸ் கடிகாரத் தொழிற்சாலைக் கூட்டமைப்பு வெளியிட்டது. பொருளதார நெருக்கடி சுவிட்சர்லாந்தை சுற்றி மற்ற நாடுகளில் நிலவுகின்ற இச்சூழ்நிலையில் சுவிஸ் கடிகாரங்களிலும் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக சுவிஸ் கடிகார விற்பனை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஹொங்காங் போன்ற நாடுகள் சுவிஸ் கடிகாரங்களை அதிகமாக வாங்க ஆர்வமாக இருப்பதைக் குறிப்பிடலாம். இந்த கடிகார விற்பனை சில சமயம் சரிவைச் சந்திப்பதும் உண்டு. கடந்த டிசம்பர் மாதத்தில் சுவிஸ் கடிகார ஏற்றுமதி 5.6% குறைந்தது. இதனால் ஹொங்காங்கில் 15% விற்பனையும் சீனாவில் 32.3% விற்பனையும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது

6/2/13

மாசி மாத எண்ணியல் பலன்கள்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உங்களைப் புத்துணர்வுடன் செயல்பட வைக்கும். மாதத் தொடக்கம் முதல் இறுதி வரை பணவரவு கூடுதலாகும்; சேமிப்பும் உயரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உடன்பிறந்த சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும்; நல்ல பணியாளர்களும் கிடைப்பார் கள். அரசு ஊழியர்கள் பாராட்டப்படுவார்கள்; வேண்டிய மாறுதலையும் அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார் கள். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார் கள். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். பொதுமக்களால் பாராட் டப்படுவார்கள். புதிய பதவிகள் தேடிவரும்.அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28. தவிர்க்க வேண்டிய தேதி: 3; 4, 22, 31; 8, 17, 26. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு. 2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும். அஜீரணக் கோளாறுகள் உருவாகும். உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல்நிலையை சீராக்கலாம். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. இதுவரையில் தொல்லை கொடுத்துவந்த கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள் புதிதாக கிளை ஆரம்பித்திட போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். யோகம் தரும் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். ஒருசிலர் புத்திர பாக்கியத்தை அடைவார்கள். நீண்டகாலமாக தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய வேலைகளை அடைவார்கள். ஒருசிலர் அரசுப் பணியில் சேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும், புகழையும் அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25. வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள். 3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்கள் வேலைப் பளுவைச் சந்திப்பார்கள். மேலதிகாரி களின் கோபத்துக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும். எனினும், உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் அதிகாரிகள் மாறுதலில் செல்வார் கள். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் துவங்கிட போட்ட திட்டம் தள்ளிப்போகும். பெண்கள் கணவரிடம் மிகவும் சகஜமாகச் செல்லவேண்டும். வீண் சண்டைகள் வர வாய்ப் புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியைச் சந்திப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாணவர்கள், சக மாணவர் களை அனுசரித்துச் செல்லவேண்டும். அவர்களால் பகை ஏற்பட்டு, காவல்துறை நடவடிக்கை வரை செல்லக்கூடும். உங்களை நேசித்த ஒருவரை திடீரென சந்திப்பீர்கள்; அவர்களால் நன்மை உண்டு. இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறு வார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்திருக் கும் பதவிகள் வருவதில் தாமதமாகும். அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29. வணங்க வேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள். 4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உங்களுக்குப் பொற்காலம். தொட்ட காரியம் அனைத்திலும் நல்ல லாபத் தைப் பெறுவீர்கள். எதிர்கால திட்டத்தை வகுத்து அதில் நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைச் செய்து கொடுப்பீர்கள். கணவன்- மனைவி அன்யோன் யம் கூடும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் கள் வந்துசேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர் புத்திர பாக்கியத்தை அடைவார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு பழைய கடன் முழுவதும் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து வியாபாரம் கூடும். அரசு ஊழியர் களுக்கு, இதுவரை சந்தித்த வேலைப் பளு குறையும். ஒருசிலருக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வு வந்துசேரும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். புதிய வீடு கட்ட போட்ட எண்ணம் நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த புதிய பதவிகளை அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28. தவிர்க்க வேண்டிய தேதி: 8, 17, 26. வணங்க வேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன். 5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இதுவரை உங்களை வாட்டி வதைத்த உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்தபடி வருமானத்தை அடைவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் தள்ளிப்போன திருமணப் பேச்சுகள் கைகூடும். பிள்ளைகளுக்கு நல்ல வரனாக அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதி யர் ஒன்று சேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். மகான்களின் தரிசனம் கிட்டும். எதிர்பார்த்த அரசு வேலை கிட்டும். அரசு ஊழியர்களின் தடைப்பட்ட ஊதிய உயர்வுகள் வந்துசேரும். வேலைப் பளு குறையும். தொழிலதிபர்கள், தொழிலை அபி விருத்தி செய்வார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்த சரக்குகள் அனைத்தையும் விற்பனை செய்வார்கள். இளைஞர்கள் எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். நீண்ட காலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனை அடைவார்கள். அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9. தவிர்க்க வேண்டிய தேதி: 3, 12, 21. வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு. 6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். புதிதாக வண்டி, வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். இதுவரை இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தில் திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். கைநிறைய பணம் வந்துசேரும். சுபகாரியத் தடைகள் நீங்கும். இதுவரை வழக்கைச் சந்தித்து வந்த தம்பதியர், வாபஸ் பெற்று ஒன்று சேர்வார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவு செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பணவரவுகளைப் பெறுவார்கள். தற்காலிகப் பணிநீக்கம் பெற்ற அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18. தவிர்க்க வேண்டிய தேதி: 3, 12, 21, 30. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி. 7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் முழுவதும் பொருளாதாரத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பெண்கள் வழியில் புதிய சொத்துகள் வந்துசேரும். பெண்கள் தாங்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் தள்ளிப்போன தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். கணவன்- மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை அடைவார்கள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டு உங்களை வாட்டி வதைத்த அதிகாரிகள் மாறிச் செல்வார்கள். காவல்துறையில் பணிபுரிபவர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலை அடைவர். மாணவர்கள் கூட்டாகப் படித்து, எதிர்வரும் தேர்வில் நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்தபடி லாபத்தை அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20. தவிர்க்க வேண்டிய தேதி: 7, 16. வணங்க வேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர். 8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பழைய கடன்கள் முழுவதையும் அடைப்பீர்கள். சேமிப்பையும் உயர்த்துவீர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் வீடுதேடி வரும். பிள்ளைகளுக்கு, இதுவரை சுப நிகழ்ச்சி நடத்துவதில் ஏற்பட்ட தடை நீங்கும். தாமதித்து வந்தாலும் நல்ல வரன்களாக வந்துசேரும். இதுவரை உங்களை வாட்டி வதைத்துவந்த நோய் விலகும். செய்யும் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள். தொழிலதிபர்கள் கூட்டு முயற்சியில் தொழிலை மேம்படுத்துவர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். அரசுப் பணியாளர்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வந்துசேரும். வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்தித்து வந்த நிலை மாறும். மகான்களின் தரிசனம் கிட்டும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வேலை தேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலையைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வி நிறுவனங்களின் பாராட்டையும் பரிசையும் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் ஒதுங்கி இருப்பார்கள். அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 4, 13, 22, 31. வணங்க வேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன். 9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உங்கள் செயல்பாடுகளால் வெளிவட்டாரத்தில் பாராட்டப்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடு அல்லது இடம் வாங்குவார்கள். அரசாங்கத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிரிந்து சென்ற சொந்தங்கள் வந்துசேரும். நீங்கள் பெரிதும் நேசித்த நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாகச் செல்லும். தொழிலதிபர்கள் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவார்கள். பொருளாதாரம் உயரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளின் தொல்லையைச் சந்தித்தாலும் லாபம் குறையாது. அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை அடைவார்கள். ஓய்வு பெற்ற சில அரசு அதிகாரிகள் புதிய வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த புதிய பதவிகளை அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 2, 11, 20, 29. வணங்க வேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்,,,, ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

3/2/13

பனையும் தமிழர் வாழ்வும்

'பனையும் வாழ்வும்’ என்ற கட்டுரையில் இருந்து கீழ் வரும் பந்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. “ வேனில் வெற்பில் கானங்காய முனையெழுந் தோடிய கெடு நாட்டாரிடைப் பனை வெளிறு அருந்து பைங்கண் யானை ” வேனிற் காலம் வெப்பத்தினால் காடுகள் அழிகின்றன. அக்காடுகளிலே குடியிருந்த மறவர்கள் எல்லோருமே குடியெழும்பிச் சென்றுவிட்டனர். இடமே பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கே யானைகள்தான் வாழுகின்றன. அவற்றிற்கும் உணவில்லை. அருகே வளர்ந்திருக்கும் பனைகள்தான் மிஞ்சியுள்ளன. உண்ணுவதற்குத் தழைகள் கிடையாமல் பசி முற்றிய யானைகள் பனையிலே உணவு காண்கின்றன. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும் பனைகளை முறித்துப் போடுகின்றன. வைரமான பனந்துண்டங்களை உடைத்து உள்ளிருக்கும் சோறினை உண்ணுகின்றன. பசியைத் தீர்க்க வலிய பனை மரத்தையே அழிக்கும் யானைகள் வலிமை பெரியது. பனை மரத்தின் உள்ளே இருக்கும் சோறு வெண்மையானது; ஈரலிப்பானது; அதனை யானைகள் உண்டு பசியாறுகின்றன. வரண்ட நிலத்திலே வளர்ந்து நிற்கும் பனைகள் மிருக உணவாகவும் பயன்படுவது புலவர் மனதைத் தொட்டுப் பாடலாயிற்று. பனஞ்சோற்றை உண்ட யானைகள் பசியாறித் தூங்கும் காட்சியையும் புலவர் காட்டுகின்றார். யானைகள் துயிலும் போது கையையொடுக்கிக் கொண்டு அசைந்த வண்ணமே துயிலும். அவை விடியற்காலத்திலே கடலில் பரதவர் தங்கியிருக்கின்ற தோணிகளைப் போலத் தோன்றுகின்ற பனைமரம் வளந்தரும் நிலையை சங்கப்பாடல் காட்டும் பண்பு இது.

2/2/13

விருந்து படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்


வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் எலிக்கறி விருந்து படைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். எலிகளின் தொல்லையை சகிக்க முடியாததால் நாடாளுமன்ற உறுப்பினரான எட்கர் சாசர்(Edgar Sauser) எலிக்கறி விருந்து படைத்தார். ஆனால் விலங்கு நல அலுவலகம் எலிக்கறி உண்பதற்கு தடைவிதித்துள்ளது. வயல்களில் விளைச்சல் இல்லை, எலிகள் வேர்களை சேதப்படுத்தி விடுகின்றன. எங்களுக்கு எலிகளைப் பிடித்து சமைத்துத் தின்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்று வானொலி ஒன்றுக்கு சாசர் பேட்டி அளித்துள்ளார். ஒவ்வோரு ஆண்டும் 40,000 முதல் 50,000 ஃபிராங்க் வரை இந்த எலிகளால் தனக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், ஒரு ஹெக்டேருக்கு ஆயிரம் எலிகள் உற்பத்தியாகின்றன எனவும் இவை 700, 800 மீற்றர் உயரத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிக்கின்றன என்று சாசர் கூறியுள்ளார். மேலும் எலிகள் வருடத்திற்கு 5 முதல் 10 தடவை குட்டிகளை ஈணுகின்றன. இதனால் இவற்றின் தொகை விரைவில் அதிகரிக்கின்றது. இவை வயலில் குழிபறிப்பதால் பயிரின் வேர்கள் சேதமாகின்றன. இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே மாநில அரசு எலி ஒழிப்பு குறித்துத் தீவிரமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாகர் மாநில அரசை கேட்டுக் கொண்டார்