சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டின் சொக்லேட் விற்பனை 4000 தொன் குறைந்திருந்ததாக சாக்கோஸ் விஸ்(Chocosuisse)என்ற நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுவிஸ் ஃபிராங்க் மதிப்பில் மாற்றம் ஏற்படாததாலும் மற்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட பொருளதார நெருக்கடி காரணமாவும் சொக்லேட் விலையின் உயர்வை தவிர்க்க இயலாததாயிற்று. இதனால் சொக்லேட் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் சுவிஸ் சொக்லேட்டின் ஏற்றுமதி 1,03,897 தொன்னாக குறைந்ததால் அதன் விற்பனையும் கடந்த வருடம் 2.2 சதவிகிதம் குறைந்துள்ளது.
மேலும் சுவிட்சர்லாந்திடமிருந்து மிக அதிகமான சொக்லேட் இறக்குமதி செய்யும் ஜேர்மனி, இந்த ஆண்டில் தனது இறக்குமதி அளவைக் குறைத்துக் கொண்டது.
இதற்கு அடுத்தபடியாக பிரிட்டன், பெல்ஜியம், சீனா, பஃஹ்ரேன், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் தங்களின் இறக்குமதியின் அளவைக் குறைத்துக் கொண்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக