2/2/13

விருந்து படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்


வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் எலிக்கறி விருந்து படைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். எலிகளின் தொல்லையை சகிக்க முடியாததால் நாடாளுமன்ற உறுப்பினரான எட்கர் சாசர்(Edgar Sauser) எலிக்கறி விருந்து படைத்தார். ஆனால் விலங்கு நல அலுவலகம் எலிக்கறி உண்பதற்கு தடைவிதித்துள்ளது. வயல்களில் விளைச்சல் இல்லை, எலிகள் வேர்களை சேதப்படுத்தி விடுகின்றன. எங்களுக்கு எலிகளைப் பிடித்து சமைத்துத் தின்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்று வானொலி ஒன்றுக்கு சாசர் பேட்டி அளித்துள்ளார். ஒவ்வோரு ஆண்டும் 40,000 முதல் 50,000 ஃபிராங்க் வரை இந்த எலிகளால் தனக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், ஒரு ஹெக்டேருக்கு ஆயிரம் எலிகள் உற்பத்தியாகின்றன எனவும் இவை 700, 800 மீற்றர் உயரத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமிக்கின்றன என்று சாசர் கூறியுள்ளார். மேலும் எலிகள் வருடத்திற்கு 5 முதல் 10 தடவை குட்டிகளை ஈணுகின்றன. இதனால் இவற்றின் தொகை விரைவில் அதிகரிக்கின்றது. இவை வயலில் குழிபறிப்பதால் பயிரின் வேர்கள் சேதமாகின்றன. இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே மாநில அரசு எலி ஒழிப்பு குறித்துத் தீவிரமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாகர் மாநில அரசை கேட்டுக் கொண்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக