23/5/13

பூவின் மருத்துவ குணங்கள்:-


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
 எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

22/5/13

கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய


நீர்கொழும்பு - ஏத்துக்கால கடற்கரையில் அரை நிர்வாண நிலையில், மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது,குறித்த பெண்களுக்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார்,.
  குளியாப்பிட்டிய கதிரானை, கோனவில பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே அபராதம் விதிக்கப்பட்டவர்களாவர்.
  கடற்கரையிலிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடிய இந்தப் பெண்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
  பிரதிவாதிகள் மூவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்

21/5/13

ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி


 கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது.
கடந்த வியாழன் அன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒருவன் அங்கிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறான்.
வான்கூவரைச் சேர்ந்த பிராட் டீரிங் என்பவர் இந்தக் கொலைகாரனின் துப்பாக்கிக் குண்டுக்குப் கடந்தவாரம் பலியானார்.
காவல் பணியாளரைப் போல உடை உடுத்தி வியாழன் பிற்பகல் துப்பாக்கி ஏந்தியபடி சிலர் எஸ்காசு நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தனர்.
டீரிங்கையும்(42) இன்னும் இரண்டு ஆண்களையும், ஒரு பெண்ணையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டனர்.
டீரிங்கை நோக்கி கொலைகாரன் மூன்றுமுறை சுட்டதில் அவர் மயங்கிச் சாய்ந்தார்.
டக்ளஸ் ஸ்மித் என்ற துப்பறியும் நிபுணர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கொலையுண்ட டீரிங் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது கொலைகாரனின் கண்களை உறுத்தியிருக்கலாம் என்றார்.
டீரிங்கிடம் மூன்று பெரிய கார்கள் இருந்ததாகவும் அவர் மிகவும் ஆடம்பரமாகத் தன்னைக் காட்டிக் கொண்டதாகவும் கூறிய ஸ்மித், அவர் வீட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் கொள்ளைக்காரர்கள் அவர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்றார்.
வியாழக்கிழமை நடந்த டீரிங்கின் படுகொலையை எடுத்துக்காட்டிய கனடா அரசு கோஸ்டா ரிச்சாவில் பெருகிவரும் வன்முறையில் இருந்து தப்பிக்க அங்கு போவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
 

15/5/13

இரட்டை கொலை: பொலிசார் தேடுதல்

  
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார்.
கொலை நடைபெற்றபொழுது அக்காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் எவருக்கும் இச்சம்பவம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.
பெற்றோரோடு வாழ முடியாத சிறுவர்கள் இந்த இல்லத்தில் அன்போடு வளர்க்கப்படுகிறார்கள். இங்கு ஒரு குடும்பச் சூழ்நிலை நிலவுவதால் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறார்கள்.
கொலைச் செய்தவரும் மிகவும் நாகரிகமாக மனிதர், குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்வார், தோட்டத்தில் அவர்களோடு உற்சாகமாக விளையாடுவார் என்று காப்பகத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைகளை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
 

9/5/13

மருத்துவமனையில் உள்ள இம்ரான் கான் தேர்தலில்


 பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் லாகூர் பிரச்சாரத்தின் போது மேடையில் இருந்து விழுந்து காயம் அடைந்தார்.
கழுத்தில் உள்ள எலும்பு மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால் மருத்துவமனையில் இருந்தபடியே, தொலைக்காட்சி மூலம், பிரச்சாரம் செய்தார்.
இந் நிலையில், இம்ரான் கானுக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், அவர் நாளை மறுநாள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் ஆறும்வரை அசையாமல் இருக்க வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் அவர் வாக்களிப்பதற்காக மியான்வாலி நகருக்கு பயணம் செய்வது சாத்தியமல்ல. 11-ம் தேதிக்கு முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட மாட்டார். அவர் பூரண குணமடைவார்.
ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்
 

7/5/13

விபத்தில் பலி எண்ணிக்கை 700 ஆக அதிகரிப்பு:


வங்க தேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த மாதம் 24ம் திகதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சுமார் 1000 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து இதுவரை 700 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அதிக பிரேதங்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

4/5/13

தங்கம் பவுனுக்கு ரூ.56 குறைந்தது,,

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 56 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 688 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2586-க்கு விற்கிறது.
 வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 135 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 45 ஆயிரத்து 690 ஆகவும், ஒரு கிராம் ரூ. 48.90 ஆகவும் உள்ளது

2/5/13

சிறிலங்காசெல்லும் ஜேர்மனிய சிங்கங்கள்,,,,

ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து சிறிலங்காவுக்கு மூன்று சிங்கங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.இம்மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் இந்த சிங்கங்கள் சிறிலங்காவுக்கு தருவிக்கப்படவுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
 ஜேர்மனியிலிருந்து இரண்டு பெண் சிங்கங்களும், தென் கொரியாவிலிருந்து ஆண் சிங்கமொன்றும் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
 இதேவேளை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 6 சிங்கங்கள் காணப்படுவதுடன், அவை மிகவும் வயதான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 கடந்த 20 வருட காலப்பகுதியில் தேசிய மிருகக்காட்சி சாலைக்கு வேறு நாடுகளிடமிருந்து சிங்கங்கள் கிடைக்கவில்லை என்றும் மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார்