29/8/13

காளி கோயிலில் மிருக பலிக்கு தடை!- நீதிமன்றம்??


இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ள இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய சங்க சம்மேளனம் என்னும் அமைப்பு உட்பட சில பௌத்த அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியது.
தகுந்த அனுமதியைப் பெறாமல் மிருக பலி யாகத்தை இந்த ஆலயம் செய்வதனால், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான சட்டம் மீறப்படுவதாகக் கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான பொதுச் சட்டம் இதனால் மீறப்படுவதாக தீர்ப்பளித்தது.
எந்தவொரு சமயத்தை பின்பற்றுவதற்கு நாட்டில் உள்ள பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாகக் கூறிய நீதிபதி சிசிர டீ ஆப்ரு, ஆனால், அதற்காக பொதுச்சட்டங்களை மீறமுடியாது என்று கூறினார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து ஆராய்வதாக ஆலயத்தின் சார்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்

28/8/13

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும்

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும்
சிரியாவில் அரச படைகள் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் இருப்பதனை தெரிந்துகொண்ட தந்தையின் உணர்வினைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்பவரின் மனதை உருக்கியுள்ளது.
சிரியாவின் தென்மேற்கு நகரான சமால்காவில் வைத்தே இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 7நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.
வொஷிங்டன் போஸ்டின் மெக்ஸ் பிஸ்ஸரே இக்காணொளியை முதற்தடவையாக கண்டுபிடித்துள்ளார்.
தற்போது இக்காணொளியானது பல இலட்சக்கணக்கான தடவை பார்க்கப்பட்டுள்ளது
{காணொளி,}

23/8/13

இலவச அழைப்புக்களை பேஸ்புக் மூலமாக மேற்கொள்வதற்கு


முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.

நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்.facebook-front_1796837b
இவ்வசதியினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் நண்பரும் iPhone – இல் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை நிறுவியிருத்தல் வேண்டும்.

21/8/13

கன்னித்தன்மை மாணவிகளுக்கு பரிசோதனை: எதிர்ப்பு


இந்தோனேஷியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
இங்கு பயிலும் மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது மனித உரிமைகளுக்கு எதிரானது என பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
 

20/8/13

மேலோங்கும் உடல் உறுப்பு ஊழல் ஜேர்மனில் !!


ஜேர்மன் நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் ஊழலானது மேலோங்கி காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஜேர்மனில் உள்ள கோட்டிங்கன்(Göttingen) பல்கலைக்கழக மருத்துவமனையில் இதுவரை 11 உடல் உறுப்பு ஊழலானது நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனையின் அனிமேன்(Aiman O) என்ற மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தவறான உடல் உறுப்பு பாகங்களை வைத்து அறுவை சிகிச்சை செய்த குற்றத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதுவரை தானம் செய்யப்பட்ட கல்லீரலை உறுப்புகள் பொருந்தாத நோயாளிகளுக்கு பொருத்தியதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது ஜேர்மனியில் 12,000 நோயாளிகள் உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால் உடல் உறுப்பு தானத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடந்து வருவதால் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையானது ஜேர்மன் நாட்டில் குறைந்து வருகிறது

18/8/13

இப்படியும் ஒரு கொடூரமா? கடைக்கு சென்ற மனைவியை சுட்டுக் கொன்ற கணவர்


தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்கு சென்ற மனைவியை, கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் சஹர் தாரா மாவட்டத்தை சேர்ந்த கொடைடாட் என்பவருக்கு மனவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவ தினத்தன்று கணவர் கொடைடாட்டுக்கு சொல்லாமல் கடைக்கு சென்றுள்ளார் அவரது மனைவி.
இவர் வெளியில் சென்றுள்ளதை கொடைடாட்டின் நணபர்கள் பார்த்து தெரிவித்து விட்டனர்.
உடனடியாக வீடுக்கு வந்த கொடைடாட், ஆத்திரம் தாங்காமல் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றுள்ளான்.
இதில் சம்பவ இடத்திலேயே மனைவி துடிதுடிக்க பலியானார்.
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், கொடைடாட்டை தேடி வருகின்றனர்
 

17/8/13

யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி! யாழ்.ஏ-9 வீதி நாவற்குழிப் பகுதியில் இன்று காலை வேக்கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் வீதியினை விட்டு விலகி தடம் புரண்டடுள்ளது.
மேற்படிச் விபத்துச் சம்பவத்திற்கு உள்ளான பிக்கப் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளபோதும் பிக்கப் வானத்தினை செலுத்திவந்த சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார்.

இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த வாகனம் நாவற்குழிப் பாலத்தின் வழுக்கும் தன்மை காரணமாக நிலைதடுமாறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று மேலும் தெரியவந்துள்ளது.

15/8/13

பெண்மீது பாலியல் பலாத்காரம் : ஆபத்தான நிலையில்


கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­ல­கப்­ பி­ரிவில் வினா­சி­யோடை கிரா­மத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் பலாத்­கா­ரத்­திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
38 வயதுடைய இந்தப் பெண் மீது சீருடை அணிந்த இருவரே பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். தனது குடும்ப வருமானத்திற்காக பனையோலையில் பொருட்கள் செய்து விற்கும் இந்தநப் பெண் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வழமைபோன்று பனை ஓலை எடுப்பதற்காக சென்றவேளையில் சீருடை அணிந்த இருவர் தமது முகங்களை துணியால் மறைத்துக்கட்டியிருந்த நிலையில் பெண் மீது பலாத்காரம் புரிந்த பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்ட இப் பெண் இரத்தப் போக்கு கட்டுப்படாத நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

14/8/13

இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த நைஜீரியப் பிரசை??கோடிக்கணக்கான ரூபா பணத்தை அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் பெற்றுள்ளீர்கள் எனக்கூறி பலரிடம்  இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந் நைஜீரியப் பிரசை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரைத் திருமணம் முடித்து வசித்து வந்த நிலையில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலரதும் தொலைபேசி இலக்கங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தெரிந்துகொண்டு அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வெளிநாட்டு, அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் உங்களுக்கு ஒரு கோடி  ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும் தான் இலங்கைக்கு வெளிநாட்டு லொத்தர் சபையால் நியமிக்கப்பட்ட  முகவர் எனவும் கூறி அவர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தை இவர் மோசடி செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் இதேபோல் முன்னரும் பலரை மோசடி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்

9/8/13

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்**


இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்

5/8/13

வெள்ளப்பெருக்கு: முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்


ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 24 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கிழக்கு கோதாவரி மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு வர படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நீதுகுமாரி தெரிவித்துள்ளார்