14/8/13

இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த நைஜீரியப் பிரசை??கோடிக்கணக்கான ரூபா பணத்தை அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் பெற்றுள்ளீர்கள் எனக்கூறி பலரிடம்  இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந் நைஜீரியப் பிரசை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரைத் திருமணம் முடித்து வசித்து வந்த நிலையில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலரதும் தொலைபேசி இலக்கங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தெரிந்துகொண்டு அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வெளிநாட்டு, அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் உங்களுக்கு ஒரு கோடி  ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும் தான் இலங்கைக்கு வெளிநாட்டு லொத்தர் சபையால் நியமிக்கப்பட்ட  முகவர் எனவும் கூறி அவர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தை இவர் மோசடி செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் இதேபோல் முன்னரும் பலரை மோசடி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக