11/3/13

கோல்சஸ்டர் இளைஞர் கொலையில் இருவர் கைது

பிரிட்டனில் உள்ள கோல்சஸ்டா்(Colchester) என்ற ஊரில் தாமஸ் பிரிட்டன்(Thomas Brittain) என்ற பாடலாசிரியரை வீட்டிற்குள் திடீரென புகுந்த யாரோ கத்தியால் பலமுறை குத்திக்கொலை செய்துவிட்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக இலண்டனைச் சேர்ந்த ஜேக் ஹம்மர்ஸ்ட்டோன்(Jack Hummerstone) மற்றும் ஆண்டிரி வெல்லா(Andre Vella) என்ற இரண்டு இளைஞர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் படங்களையும் எஸ்ஸெக்ஸ் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இந்த இளைஞர்களின் வாக்குமூலத்தில் மூலமாக தாமஸ் பிரிட்டனின் கொலை விபரம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிசார் ஊடகத்தினரிடம் கருத்து வெளியிடுகையில், நேற்று அதிகாலை 1.45 மணியளவில் பாரக்சைட் குவார்ட்டரிலுள்ள ஒரு நண்பர் வீட்டில் பாடலாசிரியர் பிரிட்டன் இருந்தபொழுது இருவரும் உள்ளே புகுந்துள்ளனர்.
ஒருவர் துப்பாக்கியைக் காட்டி பிரிட்டனை மிரட்டியுள்ளார் என்றும் அடுத்தவர் தன் கையில் இருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இக்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக