13/3/13

கஞ்சா போதையில் இளைஞர்கள் வன்முறை


யெவர்டோன் லெஸ் லெய்ன்ஸ்(Yverdon-les-Bains) என்ற இடத்திலுள்ள மெக்டொனால்டின் உணவகம் ஓன்றின் முன்னர் ஆக்கிரமித்திருந்த கஞ்சா புகைத்த இளைஞர்களை அந்த இடத்தை விட்டுப் போகுமாறு அதட்டிய காவல்காரரை அவர்கள் அடித்து உதைத்துள்ளனர்.
டிரான்செஸ்கோ பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் இந்த உணவகத்தின் வாயிற் காவலராக பணியாற்றி வருகிறார்.
உணவகத்தின் முன்னர் 15 முதல் 20 வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைத்துகொண்டு இருப்பதைக் கண்டு காவல்காரா் அவர்களை விரட்டியுள்ளார்.
அவர்களோ போதை வெறியில் அவரைத் தாக்கத் தொடங்கி அவர் முகத்திலேயே குத்தியதில் பற்கன் உடைந்து, முகம் வீங்கி, உதடு கிழிந்து, ரத்தம் கொட்டி, மூக்கு உடைந்துள்ளது.
ரத்தக் கசிவு அதிகமானதால் அவர் மயங்கி விழுந்த பின்னரும் கூட அவர்கள் அவரை கால்களால் உதைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பொலிசாரிடம் தகவல் கொடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி கொண்டுயிருக்கிறார்கள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக