பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி, தலிபன்களால் தலையில் சுடப்பட்டு, மரணத்துடன் போராடி உயிர் பிழைத்தவர் சிறுமி மலாலா.
பள்ளிக்கூட சிறுமியான இவர், பெண் கல்விக்கு ஆதரவாக போராடியமை உலக நாடுகளை கவர்ந்தது.
இந்நிலையில் மலாலாவின் பெயர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு கொலம்பியா மற்றும் மியான்மர் தலைவர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சமுதாய தொண்டிற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் பெயரும் அந்த ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக