16/3/13

ஆளில்லா "வானில்" மோதாமல் தப்பித்த விமானம்


டொரொண்ட்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் எச்சரிக்கையை மீறி விமானத்தை இறக்கிய விமானியின் மீது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புக் குழு விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.
திங்கட்கிழமை இரவு 11.39க்கு ஏர் கனடா 178 என்ற ஜெட் விமானம் 97 பயணிகளுடன் தரையிறங்கியது.
அப்போது விமானிகளிடம் தற்போது தரையிறங்க வேண்டாம் என்று இரண்டுமுறை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அது யாருக்கோ விடப்பட்ட எச்சரிக்கையாகக் கருதிய விமானிகள் தமது விமானத்தைத் தரையில் இறக்கினர்.
அப்போது ஒருதளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தவர் தனது வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது தான் வந்த வான் உள்ளே ஆளில்லாத நிலையில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். 60 மீற்றர் தொலைவிற்கு வான் போய்விட்டது.
ஓட்டுநர் ஒருவரும் இல்லாமல் வான் நகர்வதைக் கூறி தற்போது ஓடு தளத்தில் விமானத்தை இறக்க வேண்டாம் என்று எச்சரித்ததை ஜெட்விமானிகள் கருத்தில் கொள்ளாமல் விமானத்தை இறக்கியபோது நூலிழையில் அந்த விமானம் வானில் மோதாமல் தப்பியது.
அதிர்ஷ்டவசமாக 97 பயணிகளும் உயிர்பிழைத்தனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக