19/3/13

இசுலாமிய தீவிரவாதியாக மாறிய பிரான்ஸ் பொலிஸ்காரர்,.,மாலித் தீவில் இசுலாமியவாதியாக வாழ்ந்து வரும் முன்னாள் பிரெஞ்சு பொலிஸ்காரர் டிஜமீல் என்பவர், ஜிஹாத் இயக்கத்தில் சேர்ந்து பிரான்சுக்கு எதிராக மாலியில் செயல்பட்டதால் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர் என்று ஊடகத் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்பொழுது கைதான முன்னாள் பொலிஸ்காரரை குறித்து அவரது அக்கா கூறுகையில், என் தம்பி கிரினோபிள் என்ற ஊரில் குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றினார் என்றும் பின்னர் பொலிஸ் துறையை விட்டு விலகி அடிக்கடி பள்ளிவாசலுக்குப் போகத் தொடங்கினார் எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சிறிது காலம் சென்ற பின்னர் மூன்று குழந்தைகளோடு மனைவியை விவாகரத்துச் செய்து தாடி வளர்த்து கொண்டு அல்கொய்தாவில் சேரப்போவதாகக் கூறி வந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர், பிரான்ஸ் நாட்டுக்கு துரோகம் செய்ததற்கான பலனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் கோபமாகக் கூறியுள்ளார்.
கடந்த சில மாதமாக பிரான்ஸ் நாட்டிற்குள்ளேயே சில இசுலாமிய தீவிரவாதிகள் உருவாகி வருகின்றனர் என்றும் இவர்களை வன்மையாக ஒடுக்குவதற்கு பிரான்ஸ் அரசு பல முயற்சிகளை செய்து வருவதாக ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக