24/3/13

கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ?


பெர்ன் நீதிமன்றம் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்ற தாய்லாந்துப் பெண்ணுக்கு ஆட்கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்காக ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இந்தப்பெண் பல சுவிஸ் நகரங்களில் ஐம்பது பேரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு பொலிசார் இந்தப்பெண்ணை ஜேர்மனியில் வைத்துக் கைது செய்துள்ளனர். அப்பொழுது அவளிடம் கடத்திக் கொண்டு வரப்பட்ட பெண்களின் ஆவணங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பெண் பொலிசாரிடம் கூறுகையில், தானும் பலிகடா ஆக்கப்பட்டவள் என்று கூறியுள்ளார்.
இதனால் அவளது குற்றத்தின் தாக்கம் குறையாது என்று நீதிமன்றம் தெரிவித்து தற்பொழுது சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தாய்லாந்தில் கடும் வறுமையின் சூழலில் குடும்பங்கள் தங்கள் பெண்களைப் பாலியல் தொழில் செய்வதற்கான பணம் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்.
இப்பெண்கள் குறைந்த பட்சமாவது அறுபதினாயிரம் ஃபிராங்க் சம்பாதித்துத் தனது கடனைத் தீர்க்க வேண்டும் என்ற நிலையில் இவர்கள் விபசாரத் தொழில் செய்து கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
இந்த விபச்சார குழுவின் தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 1.8 மில்லியன் மூலமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக