3/10/13

நாம்உண்ணும்உணவால் உண்டாகும் உடல் மாற்றம்


   உணவு 35 வயதாகும் உங்களைப் பார்த்து யாராவது ‘உங்களுக்கென்ன 40 வயசிருக்குமா’ எனக் கேட்டால் எப்படிப் பதறிப் போவீர்கள்? உண்மையான வயதை நிரூபிக்க எப்படியெல்லாம் தவிப்பீர்கள்? ‘என்னைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டாங்களே…’ என எத்தனை நாள்கள் தூக்கமின்றி மாய்ந்து போவீர்கள்? அதே நியாயம்தானே உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும்..? 8 வயதுப் பெண்குழந்தை 12 வயதுக்கான வளர்ச்சியுடன்

நின்றால்? 10 வயது ஆண் குழந்தை, பூனைமுடி மீசையுடன் நெடுநெடுவென உயர்ந்து நின்றால்? ‘அவ அப்படியே அவங்கப்பாவை மாதிரி… அதான் கிடுகிடுன்னு வளர்ந்துட்டா’ என்றும், ‘ஆம்பிளைப் பசங்க இப்படித்தான்… சீக்கிரம் வளர்ந்துடுதுங்க’ என்றும் ஏன் சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்?
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் ரொம்பவே பாவம்! பின்னே… பிறந்தது

 முதல் 12 வயது வரை அனுபவிக்க வேண்டிய மழலைப்பருவத்தை வெகு சீக்கிரம் தொலைத்துவிட்டு, வேக வேகமாக பதின்ம வயதுக்குள் தள்ளப்படுகிற அவர்கள் பாவம்தானே? மழலையைத் தொலைத்துவிட்டு, மளமளவென அதிகரிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முழுக்காரணம் அவர்களது உணவுப்பழக்கம்! ஊட்டத்தின் அடிப்படையில் உணவுகளைத் தேர்ந்தெடுக்காமல், சுவையின் அடிப்படையில் சாப்பிட்டுப் பழகியதன் விளைவு!

13 வயதின் தொடக்கத்தைத்தான் டீன் ஏஜ் என்கிறோம். இன்றோ பெண் குழந்தைகளும் சரி, ஆண் குழந்தைகளும் சரி, அதற்கு முன்பாகவே டீன் ஏஜின் மாறுதல்களை உணர்கிறார்கள். பெண் குழந்தைகள் 8, 9 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கோ 10 வயதுக்கு முன்பே குரல் உடைகிறது… முகப்பரு வருகிறது… மீசை அரும்புகிறது.
பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும், ஆண் பிள்ளைகளுக்கு ஆன்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும்

கொடுப்பதன்பிரதிபலன்கள்தான் எல்லாம்.  25 வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் முடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு 35 அல்லது 37 வயதாகும் போது, 10 வயதில் மகனோ, மகளோ இருப்பார்கள். 35க்குப் பிறகு பல பெற்றோருக்கும் உணர்வு நரம்புகள் பலவீனமடைகின்றன. செத்துப்போன நாக்கு, காரசாரமாகக் கேட்கிறது. தமது தேவைக்காக அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர்,

அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன

.சரி… இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? உணவுமுறை மாற்றம் மட்டுமே! காலை உணவுக்கு வாரம் இருமுறை வெறும் பழங்களைக் கொடுத்துப் பழக்குங்கள். மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்து, பருப்பு மற்றும் பழம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இரவு உணவு 8 மணிக்குள் முடியட்டும். அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, புதினா

சேர்த்தரைத்த சட்னி கட்டாயம் இடம் பெறட்டும். இரவில் பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை! உங்கள் குழந்தை சராசரியைவிடக் குறைவான எடையுடன் இருந்தால் மட்டுமே பால் தரலாம். சாதாரண எடை இருந்தால் பால் தேவையில்லை. குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே கொடுங்கள். 90 சதவிகிதம் சைவ

உணவாகவே இருக்கட்டும். நிறைய தண்ணீர் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நாளொன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பிள்ளைகளுக்கு துரித உணவு மோகம் குறைவது நிச்சயம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீர் இன்னும் உன்னதம். கரிசலாங்கண்ணிக் கீரை அடை, உணவுப் பொடி, சிவப்பு அவல் உப்புமா இவை
குழந்தைளுக்கு ,அவசியம்

அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர், அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். இதனால் பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன.

கேரள மக்கள் கல்வியறிவிலும் கலைத்திறன்களிலும் முன்னணி வகிக்க, அவர்கள் தினசரி எடுத்துக்கொள்கிற சீரகத் தண்ணீரும் ஒரு வகையில் காரணம். நுட்ப உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை மேம்படுத்தும் சக்தி அதற்கு உண்டு என்றால் நம்புவீர்களா? பிஞ்சிலே பழுக்க வைக்கிற பாவச் செயலை உணர்ந்து, இனியாவது குழந்தைகளுக்கு முழுமையான மழலைப் பருவத்தை அனுபவிக்கிற சுதந்திரத்தைக் கொடுங்கள் பெற்றோர்களே..!
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக