18/10/13

கடைக்கு சிசுவின் சடலத்துடன் வந்த இளம்பெண்


அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இப்பகுதியில், திருடர்களை கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்கள் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பையிலிருந்து துர்நாற்றம் வரவே, பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, ஒரு பெண்ணின் பையில் பச்சிளம் சிசு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ந்து போயினர்.

அந்தப் பெண்களில் ஒருவர், ஒருநாள் முன்னதாகத்தான் இதனைப் பிரசவித்ததாகவும், அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு கையில் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
அந்தக் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா? என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.

அவர் கொடுத்த முகவரியில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
மற்றொரு பெண் கொடுத்த முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை.

இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரசவித்ததாகக் கூறப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது பையில் இருந்த சிசுவின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறப்பிற்கான காரணம் தெரிந்தபின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக