6/2/13

மாசி மாத எண்ணியல் பலன்கள்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உங்களைப் புத்துணர்வுடன் செயல்பட வைக்கும். மாதத் தொடக்கம் முதல் இறுதி வரை பணவரவு கூடுதலாகும்; சேமிப்பும் உயரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உடன்பிறந்த சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும்; நல்ல பணியாளர்களும் கிடைப்பார் கள். அரசு ஊழியர்கள் பாராட்டப்படுவார்கள்; வேண்டிய மாறுதலையும் அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார் கள். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர்வார் கள். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். பொதுமக்களால் பாராட் டப்படுவார்கள். புதிய பதவிகள் தேடிவரும்.அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28. தவிர்க்க வேண்டிய தேதி: 3; 4, 22, 31; 8, 17, 26. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு. 2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும். அஜீரணக் கோளாறுகள் உருவாகும். உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல்நிலையை சீராக்கலாம். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. இதுவரையில் தொல்லை கொடுத்துவந்த கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலதிபர்கள் புதிதாக கிளை ஆரம்பித்திட போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். யோகம் தரும் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். ஒருசிலர் புத்திர பாக்கியத்தை அடைவார்கள். நீண்டகாலமாக தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய வேலைகளை அடைவார்கள். ஒருசிலர் அரசுப் பணியில் சேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும், புகழையும் அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25. வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள். 3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்கள் வேலைப் பளுவைச் சந்திப்பார்கள். மேலதிகாரி களின் கோபத்துக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும். எனினும், உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் அதிகாரிகள் மாறுதலில் செல்வார் கள். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் துவங்கிட போட்ட திட்டம் தள்ளிப்போகும். பெண்கள் கணவரிடம் மிகவும் சகஜமாகச் செல்லவேண்டும். வீண் சண்டைகள் வர வாய்ப் புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியைச் சந்திப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாணவர்கள், சக மாணவர் களை அனுசரித்துச் செல்லவேண்டும். அவர்களால் பகை ஏற்பட்டு, காவல்துறை நடவடிக்கை வரை செல்லக்கூடும். உங்களை நேசித்த ஒருவரை திடீரென சந்திப்பீர்கள்; அவர்களால் நன்மை உண்டு. இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறு வார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்திருக் கும் பதவிகள் வருவதில் தாமதமாகும். அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29. வணங்க வேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள். 4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உங்களுக்குப் பொற்காலம். தொட்ட காரியம் அனைத்திலும் நல்ல லாபத் தைப் பெறுவீர்கள். எதிர்கால திட்டத்தை வகுத்து அதில் நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைச் செய்து கொடுப்பீர்கள். கணவன்- மனைவி அன்யோன் யம் கூடும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் கள் வந்துசேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர் புத்திர பாக்கியத்தை அடைவார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு பழைய கடன் முழுவதும் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து வியாபாரம் கூடும். அரசு ஊழியர் களுக்கு, இதுவரை சந்தித்த வேலைப் பளு குறையும். ஒருசிலருக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வு வந்துசேரும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். புதிய வீடு கட்ட போட்ட எண்ணம் நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த புதிய பதவிகளை அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28. தவிர்க்க வேண்டிய தேதி: 8, 17, 26. வணங்க வேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன். 5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இதுவரை உங்களை வாட்டி வதைத்த உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்தபடி வருமானத்தை அடைவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் தள்ளிப்போன திருமணப் பேச்சுகள் கைகூடும். பிள்ளைகளுக்கு நல்ல வரனாக அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதி யர் ஒன்று சேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். மகான்களின் தரிசனம் கிட்டும். எதிர்பார்த்த அரசு வேலை கிட்டும். அரசு ஊழியர்களின் தடைப்பட்ட ஊதிய உயர்வுகள் வந்துசேரும். வேலைப் பளு குறையும். தொழிலதிபர்கள், தொழிலை அபி விருத்தி செய்வார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்த சரக்குகள் அனைத்தையும் விற்பனை செய்வார்கள். இளைஞர்கள் எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். நீண்ட காலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனை அடைவார்கள். அரசியல் வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9. தவிர்க்க வேண்டிய தேதி: 3, 12, 21. வணங்க வேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு. 6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். புதிதாக வண்டி, வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். இதுவரை இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தில் திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். கைநிறைய பணம் வந்துசேரும். சுபகாரியத் தடைகள் நீங்கும். இதுவரை வழக்கைச் சந்தித்து வந்த தம்பதியர், வாபஸ் பெற்று ஒன்று சேர்வார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவு செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பணவரவுகளைப் பெறுவார்கள். தற்காலிகப் பணிநீக்கம் பெற்ற அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18. தவிர்க்க வேண்டிய தேதி: 3, 12, 21, 30. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி. 7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் முழுவதும் பொருளாதாரத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பெண்கள் வழியில் புதிய சொத்துகள் வந்துசேரும். பெண்கள் தாங்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த மங்கள நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் தள்ளிப்போன தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். கணவன்- மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை அடைவார்கள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டு உங்களை வாட்டி வதைத்த அதிகாரிகள் மாறிச் செல்வார்கள். காவல்துறையில் பணிபுரிபவர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலை அடைவர். மாணவர்கள் கூட்டாகப் படித்து, எதிர்வரும் தேர்வில் நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்தபடி லாபத்தை அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20. தவிர்க்க வேண்டிய தேதி: 7, 16. வணங்க வேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர். 8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பழைய கடன்கள் முழுவதையும் அடைப்பீர்கள். சேமிப்பையும் உயர்த்துவீர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் வீடுதேடி வரும். பிள்ளைகளுக்கு, இதுவரை சுப நிகழ்ச்சி நடத்துவதில் ஏற்பட்ட தடை நீங்கும். தாமதித்து வந்தாலும் நல்ல வரன்களாக வந்துசேரும். இதுவரை உங்களை வாட்டி வதைத்துவந்த நோய் விலகும். செய்யும் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள். தொழிலதிபர்கள் கூட்டு முயற்சியில் தொழிலை மேம்படுத்துவர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். அரசுப் பணியாளர்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வந்துசேரும். வியாபாரிகள் கடும் போட்டியைச் சந்தித்து வந்த நிலை மாறும். மகான்களின் தரிசனம் கிட்டும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வேலை தேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலையைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வி நிறுவனங்களின் பாராட்டையும் பரிசையும் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் ஒதுங்கி இருப்பார்கள். அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 4, 13, 22, 31. வணங்க வேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன். 9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உங்கள் செயல்பாடுகளால் வெளிவட்டாரத்தில் பாராட்டப்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கிட போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடு அல்லது இடம் வாங்குவார்கள். அரசாங்கத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிரிந்து சென்ற சொந்தங்கள் வந்துசேரும். நீங்கள் பெரிதும் நேசித்த நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாகச் செல்லும். தொழிலதிபர்கள் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவார்கள். பொருளாதாரம் உயரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள். வியாபாரிகள் போட்டி வியாபாரிகளின் தொல்லையைச் சந்தித்தாலும் லாபம் குறையாது. அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை அடைவார்கள். ஓய்வு பெற்ற சில அரசு அதிகாரிகள் புதிய வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த புதிய பதவிகளை அடைவார்கள். அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27. தவிர்க்க வேண்டிய தேதி: 2, 11, 20, 29. வணங்க வேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்,,,, ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக