மத்தியகிழக்கில் தொழில்நிமித்தம் மத்தியகிழக்கிற்கு சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 56 இலங்கைப் பயணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் 3 விமானங்களில் இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடு திரும்பியோரில் பெண்கள் மற்றும் ஆண்களும் அடங்குகின்றனர்.
சவுதி அரேபியாவிலிருந்து 33 பேரும், கட்டாரிலிருந்து 8 பேரும், ஜோர்தானிலிருந்து 15 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ளோரில் 1 ஆண் மற்றும் 2 பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது அங்கொடை மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மற்றையோருக்கு பணம் வழங்கி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக