பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம்.
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.
நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர்.
கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
தற்போது ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வரும் அனிதா குப்புசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார். முன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக