26/1/13

அரசியலில் காலடி பதிக்க ஆயத்தமாகும் பேஸ்புக்

சூக்கர்பேர்க்999பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க் அரசியலில் நுழைவதற்கான ஆயத்த பணிகளில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூ ஜேர்ஸ்னி ஆளுனர் கிரிஸ் கிரிஸ்டிக்கு ஆதரவாக நிதி திரட்டும் நிகழ்வொன்றை மார்க் சூக்கர்பேர்க் அடுத்தமாதம் நடத்தவுள்ளாராம். கலிபோர்னியோவில் தனது பாலோ அல்டோ வீட்டியிலேயே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார் சூக்கர்பேர்க். ஆளுனராக மறுபடியும் தேர்தலில் களமிறங்கும் குடியரசு கட்சியின் கிரிஸ் கிரிஸ்டிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய நிதிதிரட்டும் நடவடிக்கையே மார்க் சூக்கர்பேர்க் நடத்தவுள்ளார். கிரிஸ் கிரிஸ்டி அடுத்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடும் என ஏற்கனவே ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், மார்க் சூக்கர்பேர்கின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக