26/1/13

வெனிசூலா நாட்டு சிறைச்சாலையில் பயங்கர மோதல்;

வெனிசூலாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஊரிபானா சிறையில் நடைபெற்ற மோதலில் 50 பேர் பலியானார்கள் என தகவல் தெரிவிக்கின்றது. சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது இந்த மோதல் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. மோதலின்போது, துப்பாக்கி சூடும் நடைபெற்றுள்ளது.
இது குறித்து மருத்துவமனை அதிகாரி ரூய் மெடீனா கூறும்போது, இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக