29/1/13

பிரிட்டனில் கடும் மழை: புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரச்னை

பிரிட்டனில் மழை கொட்டும் என்பதால் அரசு இனியும் ரோமானியா பல்கேரியா நாடுகளிலிருந்து புகலிடம் நாடி வந்தவர்களின் கால அவகாசத்தை நீட்டிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இனியும் தங்க விரும்புவோர் இன்னும் ஆறுமாதப் பிழைப்புக்கான வேலைவாய்ப்பு, வருமானம் போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இங்கு வந்து மூன்று மாதத்துக்குள் வேலை தேடியிருக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது. போலந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்த பின்பு அங்கியிருந்து இங்கிலாந்து நாட்டிற்கும் வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகிறது. இவர்களால் இடநெருக்கடி ஏற்படத் தொடங்கிவிட்டது என்று கூறினார் உள்ளாட்சி மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் எரிக் பிக்கிள்ஸ்(Eric Pickles). போலாந்து, செக்குடியரசு, லாத்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிக ஒன்றியத்துடன் இணைந்து பின்பு ஏறத்தாழ மூன்று லட்சம் பேர் பிரிட்டனுக்குள் வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் பிக்கிள்ஸ். மேலும் ரோமேனியா பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 29 மில்லியன் பேர் பிரிட்டனின் தங்கியுள்ளனர். அதனால் இனியும் இவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க இயலாது என்று பிரிட்டன் அரவு உறுதியாகத் தெரிவித்துவிட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக