27/1/13

விஸ்வரூபம் திரையிடப்பட்ட திரையரங்கு மீது கல்வீச்சு

8765கேரளாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட திரையரங்கு மீது ஒரு கும்பல் கல்வீச்சு நடத்தியது விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு 2 வார தடை விதித்துள்ளது. ஆனால் கேரளாவில் கடந்த 25ம் திகதி படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் உள்ளது. பெங்களூரில் விஸ்வரூபம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆனால் படத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு கிளம்பாமல் இல்லை. ஆனாலும் எதிர்ப்புகளுக்கு இடையே படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொல்லத்தில் உள்ள பார்த்தா மூவி ஹவுஸ் என்ற தியேட்டரில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. ரிலீஸான உடனேயே பார்த்தா மூவி ஹவுஸில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் சில மணி நேரத்தில் திடீர் என்று அங்கு வந்த கும்பல் ஒன்று தியேட்டர் மீது கல்வீசித் தாக்கியது. பார்த்தா மூவி ஹவுஸ் தாக்கப்பட்டதையடுத்து அதற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக