23/7/15

நெடுந்தீவு அரவிந்தின் மறுபடியும் ஒரு காதல்

மறுபடியும் ஒரு காதல்
கணவன் மனைவியாய்
பிரிவுகள் நேர்ந்தபின்
நினைவுகளை
ஒன்றுசேர்த்து
நிஜங்களை ஆராய்கையில்
சந்தேகம் தப்பென்று
என்னுகிறேன்.
கண்ணகியாய் இருந்த உன்னை காரிருளில்
தள்ளிவிட்டேன்
சந்தேகம் எனும் படுகுழிக்குள்
விழுந்தது என் மனம்
தூரமாய்ப்போனது
நம் உறவு.
மன்னித்து விடு என்னவளே.
காதலின்போது தோற்காத
நம் அன்பு
கல்யாணத்தின் பின் 
கறைபட்டுப்போனது
வெப்பத்தில் நொருங்கிய
கண்ணாடிபோல்
சுட்டுக்கொண்டே
உடைகிறது என் மனம்
மன்னித்துவிடு
உயிர்வரை இனித்தவளே.
மறுஜென்மம் தேவை
இல்லை நாம் மறுபடியும்
காதல் செய்வோம்
கணவன்,மனைவியாய்
இப்போதே இணைவோம்
மறுபடியும் வாழ்வோம்

ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20/5/15

ரதிமோகனின் அன்பு கொண்ட இதயம்

மெய்யன்பு
பொய்யாகலாம்
அழுகையும்
வலியும்
மெய்யாகலாம்….

இதயத்து வலிக்கு
தனிமை
நிவாரணம் தேடித்
தரலாம்..

தனிமைக்கு
எழுத்தாணி
துணை
சேர்க்கலாம்.
அதிகமான அன்பும்
அதிக உரிமையும்
பிரிவை தந்து
செல்லலாம்….

அதீத அன்பு
அதிக சோகம்
ஆழமாய்
நேசிக்காதே என
அறிவுரை உரைக்க..
இதயமிங்கு
தெளிவாகி
தெளித்து நின்றது
பன்னீரை
செந்நீரையல்ல.
ஆக்கம்: ரதிமோகன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


25/2/15

அந்தக் காலங்களில் செம்பு குடங்களில் தண்ணீர் வெப்பது ஏன்???

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள்.
ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.
சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?
செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது.
இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.
மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா?
வாங்க பார்க்கலாம்! வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.
இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:
1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

25/8/14

இன்று காலை நடந்த நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!


 அராகரா முழக்கம் வானைப் பிளக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆவது திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது நிழல் படங்கள் இணைப்பு

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

nalk33 nalk35 nalk36 nalk37
நல்லைக் கந்தனின் இரதோற்சவப்பெருவிழா
இங்கு அழுத்தவும் காணொளி நிழல் படங்கள் இணைப்பு


               நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

6/2/14

வாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம்

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும். வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும். தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும்எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன்கிடைக்கும். மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

11/11/13

காதலின் தண்டனை....


காதலின் தண்டனை
இறைவனின் தண்டனை
உன்னை காதலித்தது
காதலின் தண்டனை
உன்னை நான்
பிரிந்தது....!
காதலின் மறைவிடம்
கனவுதான் -அதில்
கூட வரமறுக்கிறாய்...!
நீ தந்த ரோஜாவில்
ஒவ்வொரு முள்ளும்
ரோஜாவால் வரவில்லை
உன்னால் வந்தது....!

28/10/13

தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர் நீர்வீழ்ச்சியில்


தேனிலவுக்கு ஊட்டிக்குச் சென்ற இலங்கைத் தமிழர்  நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.

ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன்.

சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்கள். தொடர் மழை காரணமாக அங்கு பாறைகள் பாசி படர்ந்து இருந்தன.

இதனால் ஒரு பாறையில் ரீகன் ஏறியபோது அது வழுக்கி கால் தடுமாறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார் ரீகன். தண்ணீர் வேகமாக போய்க் கொண்டிருந்ததாலும், சுழல் இருந்ததாலும் அதில் சிக்கிக் கொண்ட ரீகனை உறவினர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.

தீயணைப்புத் துறைக்கும் தகவல் போனது. ஆனால் ரீகன் தண்ணீருக்குள் போய் விட்டார். தீயணைப்புப் படையினர் வந்து நீண்ட நேரம் தேடியும் ரீகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ரீகனின் உயிரற்ற உடல் கிடைத்தது. ஈழத் தமிழர் ஒருவர் தேனிலவுக்காக வந்த இடத்தில் நீரில் விழுந்து பலியான தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர்

சங்கரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ரீகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

23/10/13

வித்தியாச நடனம் நிகழ்வில் பார்வையாளர்களை கவர்ந்த "


 
கனடியத் தமிழர் மத்தியில் நடத்தப்படும் நிகழ்வு எதுவாயினும் இசை , நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமையான ஒன்று தான். இதுவரை நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலுமே நம் பாரம்பரிய நடனமான பரத

நாட்டியத்திற்கும் , தமிழ் திரையுலகப் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த முறையைத் தவிர்த்து முழுமையான வர்த்தகத் திருவிழாவாக க்டந்த ஆண்டு நடைபெற்ற " Taste Of Online marketing " நிகழ்வில் இணைய

சந்தைப்படுத்துதல் குறித்து நிரோதினி பரராஜசிங்கம் மாணவர்களின் வித்தியாசமான நடனம் விழாவிற்கு வந்திருந்தோர் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

இணைய விளம்பர யுக்தியில் இறங்கியுள்ள முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் , யூ-ரியூப் , கூகிள் ஆகிய அனைத்தும் தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் என்ற குடையின் கீழ் வருவது போன்று சித்தரிக்கப்பட்டு இதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகளுடன் நடனமாடினர்

 நாட்டிய நிகழ்விற்கென பிரத்யேக இசையமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சர்யமூட்டுவதாய் அமைந்தது. மொத்தத்தில் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாய் அமைந்திருந்தது இந்நாட்டிய நிகழ்வு.

18/10/13

கடைக்கு சிசுவின் சடலத்துடன் வந்த இளம்பெண்


அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இப்பகுதியில், திருடர்களை கண்டுபிடிப்பதற்காகவே பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண்கள் இருவர் கடைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த பையிலிருந்து துர்நாற்றம் வரவே, பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, ஒரு பெண்ணின் பையில் பச்சிளம் சிசு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ந்து போயினர்.

அந்தப் பெண்களில் ஒருவர், ஒருநாள் முன்னதாகத்தான் இதனைப் பிரசவித்ததாகவும், அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு கையில் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
அந்தக் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா? என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.

அவர் கொடுத்த முகவரியில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை.
மற்றொரு பெண் கொடுத்த முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை.

இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், பிரசவித்ததாகக் கூறப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது பையில் இருந்த சிசுவின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறப்பிற்கான காரணம் தெரிந்தபின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 

3/10/13

நாம்உண்ணும்உணவால் உண்டாகும் உடல் மாற்றம்


   உணவு 35 வயதாகும் உங்களைப் பார்த்து யாராவது ‘உங்களுக்கென்ன 40 வயசிருக்குமா’ எனக் கேட்டால் எப்படிப் பதறிப் போவீர்கள்? உண்மையான வயதை நிரூபிக்க எப்படியெல்லாம் தவிப்பீர்கள்? ‘என்னைப் பார்த்து அப்படிக் கேட்டுட்டாங்களே…’ என எத்தனை நாள்கள் தூக்கமின்றி மாய்ந்து போவீர்கள்? அதே நியாயம்தானே உங்கள் பிள்ளைகள் விஷயத்திலும்..? 8 வயதுப் பெண்குழந்தை 12 வயதுக்கான வளர்ச்சியுடன்

நின்றால்? 10 வயது ஆண் குழந்தை, பூனைமுடி மீசையுடன் நெடுநெடுவென உயர்ந்து நின்றால்? ‘அவ அப்படியே அவங்கப்பாவை மாதிரி… அதான் கிடுகிடுன்னு வளர்ந்துட்டா’ என்றும், ‘ஆம்பிளைப் பசங்க இப்படித்தான்… சீக்கிரம் வளர்ந்துடுதுங்க’ என்றும் ஏன் சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்?
இந்தத் தலைமுறைக் குழந்தைகள் ரொம்பவே பாவம்! பின்னே… பிறந்தது

 முதல் 12 வயது வரை அனுபவிக்க வேண்டிய மழலைப்பருவத்தை வெகு சீக்கிரம் தொலைத்துவிட்டு, வேக வேகமாக பதின்ம வயதுக்குள் தள்ளப்படுகிற அவர்கள் பாவம்தானே? மழலையைத் தொலைத்துவிட்டு, மளமளவென அதிகரிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முழுக்காரணம் அவர்களது உணவுப்பழக்கம்! ஊட்டத்தின் அடிப்படையில் உணவுகளைத் தேர்ந்தெடுக்காமல், சுவையின் அடிப்படையில் சாப்பிட்டுப் பழகியதன் விளைவு!

13 வயதின் தொடக்கத்தைத்தான் டீன் ஏஜ் என்கிறோம். இன்றோ பெண் குழந்தைகளும் சரி, ஆண் குழந்தைகளும் சரி, அதற்கு முன்பாகவே டீன் ஏஜின் மாறுதல்களை உணர்கிறார்கள். பெண் குழந்தைகள் 8, 9 வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கோ 10 வயதுக்கு முன்பே குரல் உடைகிறது… முகப்பரு வருகிறது… மீசை அரும்புகிறது.
பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும், ஆண் பிள்ளைகளுக்கு ஆன்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளையும்

கொடுப்பதன்பிரதிபலன்கள்தான் எல்லாம்.  25 வயதில் ஒரு ஆணோ, பெண்ணோ திருமணம் முடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு 35 அல்லது 37 வயதாகும் போது, 10 வயதில் மகனோ, மகளோ இருப்பார்கள். 35க்குப் பிறகு பல பெற்றோருக்கும் உணர்வு நரம்புகள் பலவீனமடைகின்றன. செத்துப்போன நாக்கு, காரசாரமாகக் கேட்கிறது. தமது தேவைக்காக அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர்,

அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன

.சரி… இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? உணவுமுறை மாற்றம் மட்டுமே! காலை உணவுக்கு வாரம் இருமுறை வெறும் பழங்களைக் கொடுத்துப் பழக்குங்கள். மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்து, பருப்பு மற்றும் பழம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இரவு உணவு 8 மணிக்குள் முடியட்டும். அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, புதினா

சேர்த்தரைத்த சட்னி கட்டாயம் இடம் பெறட்டும். இரவில் பிள்ளைகளுக்கு பால் கொடுக்கும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை! உங்கள் குழந்தை சராசரியைவிடக் குறைவான எடையுடன் இருந்தால் மட்டுமே பால் தரலாம். சாதாரண எடை இருந்தால் பால் தேவையில்லை. குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே கொடுங்கள். 90 சதவிகிதம் சைவ

உணவாகவே இருக்கட்டும். நிறைய தண்ணீர் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நாளொன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பிள்ளைகளுக்கு துரித உணவு மோகம் குறைவது நிச்சயம். சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீர் இன்னும் உன்னதம். கரிசலாங்கண்ணிக் கீரை அடை, உணவுப் பொடி, சிவப்பு அவல் உப்புமா இவை
குழந்தைளுக்கு ,அவசியம்

அதிக காரம், மசாலா, புளிப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுகிற பெற்றோர், அவற்றையே பிள்ளைகளுக்கும் பழக்குகிறார்கள். இதனால் பிஞ்சு உள்ளங்களில் பெரிய மனித தோரணை துளிர்விடுகிறது. உணவால் உண்டாகும் உடல் மாற்றம் ஒரு பக்கம், புறநிலை மாற்றங்கள் இன்னொரு பக்கம் என எல்லாம் சேர்ந்து, அவர்களை அறியாத வயதில் புரியாத தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன.

கேரள மக்கள் கல்வியறிவிலும் கலைத்திறன்களிலும் முன்னணி வகிக்க, அவர்கள் தினசரி எடுத்துக்கொள்கிற சீரகத் தண்ணீரும் ஒரு வகையில் காரணம். நுட்ப உணர்வுகளைத் தூண்டி, சிந்தனையை மேம்படுத்தும் சக்தி அதற்கு உண்டு என்றால் நம்புவீர்களா? பிஞ்சிலே பழுக்க வைக்கிற பாவச் செயலை உணர்ந்து, இனியாவது குழந்தைகளுக்கு முழுமையான மழலைப் பருவத்தை அனுபவிக்கிற சுதந்திரத்தைக் கொடுங்கள் பெற்றோர்களே..!
 
 
 

28/9/13

கதிர்காம தேவாலயத்துக்கு பூட்டு 2 ஆம் திகதி வரை


கதிர்காம தேவாலயம் நாளை பகல் பூஜையின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.
இதனை கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே சசீந்திர ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கதிர்காமம் கிரிவெஹர ரஜமகா விகாரையில் விகாராதிபதி மற்றும் ஊவா வெல்லச பீடாதிபதி கலாநிதி அளுத்வெவ சோரத நாயக்க தேரர் காலமானதை அடுத்தே தேவாலயம் மூடப்படவுள்ளது.

20/9/13

மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்


எந்நாளும் மனிதர்களை வெல்ல நினைக்காதீர்கள்
 தோல்வியை மட்டும் வெல்லவேண்டுமென்று நினையுங்கள்

16/9/13

நிர்க்கதி நிலை: 56 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

 

மத்தியகிழக்கில் தொழில்நிமித்தம் மத்தியகிழக்கிற்கு சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 56 இலங்கைப் பயணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் 3 விமானங்களில் இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடு திரும்பியோரில் பெண்கள் மற்றும் ஆண்களும் அடங்குகின்றனர்.

சவுதி அரேபியாவிலிருந்து 33 பேரும், கட்டாரிலிருந்து 8 பேரும், ஜோர்தானிலிருந்து 15 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ளோரில் 1 ஆண் மற்றும் 2 பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது அங்கொடை மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு  அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மற்றையோருக்கு பணம் வழங்கி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

10/9/13

இவ்வளவு தூசியும் கண்ணுக்குள் ?

ஒரு மனுஷனுக்கு கண்ணுக்குள்ள இவ்வளவு தூசியும், அழுக்கும் இருக்குமா ? அதை நாம் நம்ப முடியாத முறையில் வெளியே எடுக்கும் இந்த பாட்டியின் திறமை அபாரம் ஆனா பாட்டி எந்த ஊருன்னு தான் தெரியவில்லை!

ஊருன்னு தான் தெரியவில்லை!

9/9/13

பாலம் உடைத்து வீழ்ந்ததால் தொழிலாளர்கள் 10பேர்



தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது:

கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாலமானது, தேயிலை மடுவத்தை அண்மித்து உள்ளமையினால், அதில் வரிசையாக சென்றே சம்பள நிலுவை, தேயிலை தூள் என்பவற்றை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். கோப்பி பயிற்செய்கை காலத்தில் அமைக்கப்பட்ட இப்பாலத்தின் இரும்பு தூண்கள் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளன.
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
இந்நிலையிலேயே, நேற்று முன்தினம் தேயிலைத் தூள் பக்கற்றுகள் வாங்குவதற்காக பாலத்தில் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது, பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயங்களுக்கு உள்ளாகிய 10ற்கும் மேற்பட்ட மக்கள் தலவாக்கலை லிந்துல பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்

3/9/13

அதிமுகவில் இணைந்த பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி


பிரபல நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம்.
பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.
நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசை என அனைத்து வகையான பாடல்களையும் இனிமையான குரலில் பாடும் வல்லமை படைத்தவர்.
கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து பல கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
தற்போது ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்தி வரும் அனிதா குப்புசாமி இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதேபோல பாமகவில் முன்பு முக்கியத் தலைவராக இருந்து பின்னர் விலகிய பேராசிரியர் தீரனும் அதிமுகவில் இன்று இணைந்தார். முன்னாள் திமுக அமைச்சரான கோமதி சீனிவாசனும் தனது கணவரோடு அதிமுகவில் இணைந்துள்ளார்.

29/8/13

காளி கோயிலில் மிருக பலிக்கு தடை!- நீதிமன்றம்??


இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ள இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய சங்க சம்மேளனம் என்னும் அமைப்பு உட்பட சில பௌத்த அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியது.
தகுந்த அனுமதியைப் பெறாமல் மிருக பலி யாகத்தை இந்த ஆலயம் செய்வதனால், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான சட்டம் மீறப்படுவதாகக் கூறியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான பொதுச் சட்டம் இதனால் மீறப்படுவதாக தீர்ப்பளித்தது.
எந்தவொரு சமயத்தை பின்பற்றுவதற்கு நாட்டில் உள்ள பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாகக் கூறிய நீதிபதி சிசிர டீ ஆப்ரு, ஆனால், அதற்காக பொதுச்சட்டங்களை மீறமுடியாது என்று கூறினார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து ஆராய்வதாக ஆலயத்தின் சார்பிலான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்

28/8/13

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும்

உயிரிழந்தாக கருதப்பட்ட மகன் திரும்பி வந்த தருணம்: மனதை உருக்கும்
சிரியாவில் அரச படைகள் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் இருப்பதனை தெரிந்துகொண்ட தந்தையின் உணர்வினைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பார்ப்பவரின் மனதை உருக்கியுள்ளது.
சிரியாவின் தென்மேற்கு நகரான சமால்காவில் வைத்தே இக்காணொளி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 7நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியானது இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.
வொஷிங்டன் போஸ்டின் மெக்ஸ் பிஸ்ஸரே இக்காணொளியை முதற்தடவையாக கண்டுபிடித்துள்ளார்.
தற்போது இக்காணொளியானது பல இலட்சக்கணக்கான தடவை பார்க்கப்பட்டுள்ளது
{காணொளி,}

23/8/13

இலவச அழைப்புக்களை பேஸ்புக் மூலமாக மேற்கொள்வதற்கு


முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் iPhone பயனர்களுக்கான இலவச அழைப்புக்களை ஏற்படுத்தும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.

நண்பர்களுடன் இலவச அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்கு பேஸ்புக் தளத்தின் சட் செய்யும் பகுதியின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ”i” எனும் ஐகானை அழுத்தி அழைப்பினை ஏற்படுத்தவேண்டிய நண்பரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இலவச அழைப்பிற்கான பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் நண்பருடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்.facebook-front_1796837b
இவ்வசதியினை பெற்றுக்கொள்வதற்கு உங்கள் நண்பரும் iPhone – இல் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை நிறுவியிருத்தல் வேண்டும்.

21/8/13

கன்னித்தன்மை மாணவிகளுக்கு பரிசோதனை: எதிர்ப்பு


இந்தோனேஷியாவில் மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
இங்கு பயிலும் மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது மனித உரிமைகளுக்கு எதிரானது என பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.