18/7/13

பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை


26 மாத குழந்தை ஒன்றை கொலை செய்ததாக டொரண்டோவில் குழந்தையின் தாயாரும் அவருடைய வாழ்க்கைத்துணைவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Marleny Cruz என்ற 25 வயது பெண்ணும், Joel France என்ற 36 வயது ஆண் ஒருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் Marleny Cruz அவர்களின் 26 மாத குழந்தையும் இருந்தது. அந்த குழந்தைக்கு Joel France தந்தை அல்ல.
இருவரும் குழந்தையை சரியாக கவனிக்காமல் அவரவர் வேலையை மட்டும் செய்து வந்துள்ளனர். திடீரென குழந்தையின் முகம் நீல நிறத்தில் மாறியதால் பதட்டமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
ஆனாலும் சிகிச்சைக்கு பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து விசாரணை செய்த பொலிசார், குழந்தையின் மரணத்திற்கு அவர்கள் இருவரின் கவனக்குறைவே காரணம் என்பதை அறிந்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜூலை 23ம் திகதி வரை அவர்கள் இருவரையும் காவலில் வைக்கும்படி டொரண்டோ நிதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அவர்களை மீண்டும் ஓகஸ்ட் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக