23/2/13

கனடாவில் பனிச்சரிவில் சிக்கிய மூவரில் ஒருவர் மரணம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் மூவரும்...

22/2/13

புகலிடம் நாடி வரும் ரோமா இனத்தவரைக் குறைக்கும்

புதிய கடுமையான சட்டங்கள் ,கனடாவுக்கு அகதிகளாக வந்து தங்குவோரின் எண்ணிக்கையை அந்நாட்டின் புதிய சட்டங்கள் குறைத்து விடுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது.ஒரு காலத்தில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ரோமா இனத்தவருக்குப் புகலிடமாக இருந்த கனடா இன்று ஒட்டவாத் திட்டம்(Ottawa’s plan) போன்ற பல்வேறு சீர்திருத்தங்களாலும், புதிய சட்டங்களாலும் அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. கனடாவின் புதிய புலம்பெயர்வுச் சட்டங்கள் குறித்து சட்டதரனி சாந்தால் தெஸ்லோகெஸ்(Chantal...

18/2/13

குறைந்த விலைக்கு விற்கப்படும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் ,,,

சூரிச்சில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் குறைந்து வருவதால் கட்டிடங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக விற்பனை நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்இரண்டு வருடத்திற்கு முன்னர் மொபிமோ(Mobimo) என்ற நிர்வனம் மொபிமோ என்ற ஒரு ஆடம்பர கட்டிடம் ஒன்றை கட்டத் தொடங்கியது. இவை 15 மாடி கொண்ட மிகவும் ஆரம்பரமான கட்டிடம் ஆகும். மக்களால் தங்க பூமி என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு 1 சதுர அடி...

17/2/13

இராட்சத விண்கல் பூமியில் விழாமல்,,,

   சென்றது! தப்பியது பூமி!ரஷ்யாவின் யூரல் மாநிலத்தில் விண்கல் வெடித்துச் சிதறியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இதில் 200 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். வெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவில் விண்கல் வெடித்துச் சிதறிய போது கால்பந்து மைதானம் போல் காட்சி தரும் ஆஸ்ட்ராய்ட் 2012 டி.ஏ.14 என்ற பாரிய விண்கல் பூமிக்கருகே பூமியை கடந்து சென்றுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமியை தாக்கும் என பலரும் கூறியதுடன்...

14/2/13

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின்...

13/2/13

தினம்தோறும் கோலா குடித்ததால் நியூசிலாந்து பெண் மரணம்,,,

கோலா நிறுவனம் கைவிரிப்பு ,நியூசிலாந்தில் ஒவ்வொரு நாளும் 10 லீட்டர் கொக்கா கோலா குடித்து வந்த 30 வயதுடைய பெண்மணியான நட்டாஷா ஹாரிஸ் என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இருதய நோயால் மரணமடைந்தார். இம் மரணத்துக்கான உண்மையன காரணம் இவர் அதிகளவு கொக்கா கோலா உட்கொண்டமையே என இப் பெண்மணியின் உடலைப் பரிசோதித்த பிரேத பரிசோதகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது மனித உடலில் சேரக் கூடிய காஃபின் (Caffeine) ஐ விட இரு மடங்கும், நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை...

11/2/13

பிரிட்டிஷ் பாடகி அடெலெக்கு கிராமி விருது(

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகரில் 55ம் ஆண்டு கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. கிராமிய விருது பெற்றவர்களின் விபரம்: இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக டெய்லர் ஸ்விஃப்ட் பாடிய We are never ever getting bake together என்ற பாடல் இடம்பெற்றது. இதை தொடர்ந்து பாப் இசைப்பாடகி அடெலே(Adele)தனது set fire rain என்ற பாடலுக்கு கிராமி விருது பெற்றார். மம்ஃபோர்டு மற்றும் ஸன்ஸ்(Mumford&Sons) என்ற இசைக்குழு தன்னுடைய...

10/2/13

சுவிஸ் சொக்லேட் விற்பனையில் சரிவு

சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டின் சொக்லேட் விற்பனை 4000 தொன் குறைந்திருந்ததாக சாக்கோஸ் விஸ்(Chocosuisse)என்ற நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுவிஸ் ஃபிராங்க் மதிப்பில் மாற்றம் ஏற்படாததாலும் மற்ற ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட பொருளதார நெருக்கடி காரணமாவும் சொக்லேட் விலையின் உயர்வை தவிர்க்க இயலாததாயிற்று. இதனால் சொக்லேட் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் சுவிஸ் சொக்லேட்டின் ஏற்றுமதி 1,03,897 தொன்னாக குறைந்ததால் அதன் விற்பனையும் கடந்த வருடம் 2.2 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திடமிருந்து...

9/2/13

ஏலத்திற்கு வரும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் சர்ச்சிலின்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கவிதை ஏலம் விடப்பட உள்ளது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு நாவல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். மேலும், கடந்த 1953ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் எழுதிய கவிதை ஒன்று பிரிட்டனில் ஏலம் விடப்பட உள்ளது. கடந்த, 1898ல் ராணுவத்தில் பணிபுரிந்த போது அவர் எழுதிய கவிதை 12 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. வரும்,...

8/2/13

அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்: இதுவரை 94 பேர் பலி

இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக்காய்ச்சல்(swine flu) தொற்று நோயினால் 94 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில், சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மோசமான குளிர்காலநிலையே பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருகின்றமைக்கு...

7/2/13

கடிகார உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் கடிகார உற்பத்தியாளர்கள், கடந்த வருடம் 24 மில்லியன் ஃபிராங்க் விற்றதை விட இந்த வருடம் கூடுதலாக 11 % விற்றுள்ளனர். இத்தகவலை சுவிஸ் கடிகாரத் தொழிற்சாலைக் கூட்டமைப்பு வெளியிட்டது. பொருளதார நெருக்கடி சுவிட்சர்லாந்தை சுற்றி மற்ற நாடுகளில் நிலவுகின்ற இச்சூழ்நிலையில் சுவிஸ் கடிகாரங்களிலும் விற்பனை உயர்ந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக சுவிஸ் கடிகார விற்பனை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணமாக...

6/2/13

மாசி மாத எண்ணியல் பலன்கள்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: இந்த மாதம் உங்களைப் புத்துணர்வுடன் செயல்பட வைக்கும். மாதத் தொடக்கம் முதல் இறுதி வரை பணவரவு கூடுதலாகும்; சேமிப்பும் உயரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உடன்பிறந்த சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச்...

3/2/13

பனையும் தமிழர் வாழ்வும்

'பனையும் வாழ்வும்’ என்ற கட்டுரையில் இருந்து கீழ் வரும் பந்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. “ வேனில் வெற்பில் கானங்காய முனையெழுந் தோடிய கெடு நாட்டாரிடைப் பனை வெளிறு அருந்து பைங்கண் யானை ” வேனிற் காலம் வெப்பத்தினால் காடுகள் அழிகின்றன. அக்காடுகளிலே குடியிருந்த மறவர்கள் எல்லோருமே குடியெழும்பிச் சென்றுவிட்டனர். இடமே பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கே யானைகள்தான் வாழுகின்றன. அவற்றிற்கும் உணவில்லை. அருகே வளர்ந்திருக்கும் பனைகள்தான் மிஞ்சியுள்ளன. உண்ணுவதற்குத்...

2/2/13

விருந்து படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் எலிக்கறி விருந்து படைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். எலிகளின் தொல்லையை சகிக்க முடியாததால் நாடாளுமன்ற உறுப்பினரான எட்கர் சாசர்(Edgar Sauser) எலிக்கறி விருந்து படைத்தார். ஆனால் விலங்கு நல அலுவலகம் எலிக்கறி உண்பதற்கு தடைவிதித்துள்ளது. வயல்களில் விளைச்சல் இல்லை, எலிகள் வேர்களை சேதப்படுத்தி விடுகின்றன. எங்களுக்கு எலிகளைப் பிடித்து சமைத்துத் தின்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்று வானொலி...