17/8/13

யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி!



 யாழ்.ஏ-9 வீதி நாவற்குழிப் பகுதியில் இன்று காலை வேக்கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் வீதியினை விட்டு விலகி தடம் புரண்டடுள்ளது.
மேற்படிச் விபத்துச் சம்பவத்திற்கு உள்ளான பிக்கப் வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளபோதும் பிக்கப் வானத்தினை செலுத்திவந்த சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பியுள்ளார்.

இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த வாகனம் நாவற்குழிப் பாலத்தின் வழுக்கும் தன்மை காரணமாக நிலைதடுமாறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது என்று மேலும் தெரியவந்துள்ளது.

15/8/13

பெண்மீது பாலியல் பலாத்காரம் : ஆபத்தான நிலையில்


கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­ல­கப்­ பி­ரிவில் வினா­சி­யோடை கிரா­மத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் பலாத்­கா­ரத்­திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
38 வயதுடைய இந்தப் பெண் மீது சீருடை அணிந்த இருவரே பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். தனது குடும்ப வருமானத்திற்காக பனையோலையில் பொருட்கள் செய்து விற்கும் இந்தநப் பெண் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வழமைபோன்று பனை ஓலை எடுப்பதற்காக சென்றவேளையில் சீருடை அணிந்த இருவர் தமது முகங்களை துணியால் மறைத்துக்கட்டியிருந்த நிலையில் பெண் மீது பலாத்காரம் புரிந்த பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்ட இப் பெண் இரத்தப் போக்கு கட்டுப்படாத நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

14/8/13

இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த நைஜீரியப் பிரசை??



கோடிக்கணக்கான ரூபா பணத்தை அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் பெற்றுள்ளீர்கள் எனக்கூறி பலரிடம்  இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந் நைஜீரியப் பிரசை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரைத் திருமணம் முடித்து வசித்து வந்த நிலையில் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலரதும் தொலைபேசி இலக்கங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தெரிந்துகொண்டு அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வெளிநாட்டு, அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் உங்களுக்கு ஒரு கோடி  ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும் தான் இலங்கைக்கு வெளிநாட்டு லொத்தர் சபையால் நியமிக்கப்பட்ட  முகவர் எனவும் கூறி அவர்களிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தை இவர் மோசடி செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் இதேபோல் முன்னரும் பலரை மோசடி செய்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்

9/8/13

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்**


இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை முதல் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாடு வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்

5/8/13

வெள்ளப்பெருக்கு: முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்


ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 24 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கிழக்கு கோதாவரி மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு வர படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நீதுகுமாரி தெரிவித்துள்ளார்