
இலங்கையில் சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி ஆலயத்தில் மிருக பலி கொடுப்பதை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ள இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய சங்க சம்மேளனம் என்னும் அமைப்பு உட்பட சில பௌத்த அமைப்புக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை வழங்கியது.
தகுந்த அனுமதியைப் பெறாமல் மிருக பலி யாகத்தை இந்த ஆலயம் செய்வதனால், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான...