23/2/13

கனடாவில் பனிச்சரிவில் சிக்கிய மூவரில் ஒருவர் மரணம்


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதில் மூவரும் பனிச்சரிவில் சிக்கிகொண்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மலைப்பகுதியில் ஏற்படும் இந்த பனிச்சரிவை தடுப்பதற்கு குவிந்திருந்த பனியை அகற்றினால் மட்டுமே அங்கு மக்கள் தமது அன்றாடப்பணிகளை நடத்தமுடியும்
 

22/2/13

புகலிடம் நாடி வரும் ரோமா இனத்தவரைக் குறைக்கும்



புதிய கடுமையான சட்டங்கள் ,கனடாவுக்கு அகதிகளாக வந்து தங்குவோரின் எண்ணிக்கையை அந்நாட்டின் புதிய சட்டங்கள் குறைத்து விடுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒரு காலத்தில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ரோமா இனத்தவருக்குப் புகலிடமாக இருந்த கனடா இன்று ஒட்டவாத் திட்டம்(Ottawa’s plan) போன்ற பல்வேறு சீர்திருத்தங்களாலும், புதிய சட்டங்களாலும் அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது.
கனடாவின் புதிய புலம்பெயர்வுச் சட்டங்கள் குறித்து சட்டதரனி சாந்தால் தெஸ்லோகெஸ்(Chantal Desloges) கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டில் ஹங்கேயினர் 415பேரும், 2011ம் ஆண்டில் 374 பேரும், 2012ம் ஆண்டில் 353 பேரும் அகதி நிலை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஏழு ஹங்கேரியினர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அகதிநிலை கேட்டு வரும் விண்ணப்பங்கள் 70 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
அரசுத் தரப்பினர் இதற்கு பதிலளிக்கையில், போலி அகதிகளைத் தடுக்கவே ஒட்டவாத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகமானதாகவும் மேலும் இச்சீர்திருத்தங்கள் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அகதி நிலை வேண்டி விண்ணப்பித்தவர்களின் உண்மை நிலையை அறிய 2 பில்லியன் டொலர் வரை அரசு செலவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினர்
 

18/2/13

குறைந்த விலைக்கு விற்கப்படும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் ,,,


சூரிச்சில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் குறைந்து வருவதால் கட்டிடங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக விற்பனை நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்
இரண்டு வருடத்திற்கு முன்னர் மொபிமோ(Mobimo) என்ற நிர்வனம் மொபிமோ என்ற ஒரு ஆடம்பர கட்டிடம் ஒன்றை கட்டத் தொடங்கியது. இவை 15 மாடி கொண்ட மிகவும் ஆரம்பரமான கட்டிடம் ஆகும்.
மக்களால் தங்க பூமி என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு 1 சதுர அடி 25,000 ஃபிராங்க் மதிப்பாக இருந்ததது. தற்பொழுது இரண்டு வருடத்திற்கு பிறகு கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பிறகு இதன் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.
இதே போன்று லாசர் என்ற இடத்திலும் நிறைய ஆடம்பர கட்டிடங்கள் மிகவும் மலிவான விலைக்கே விற்கப்படுகிறது. வீழ்ச்சியடைந்த பொருளதாரமும், குறைந்துள்ள பணத்தின் மதிப்பே இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் என கருதப்படுகின்றது.
இதனால் மக்கள் கட்டிடங்களின் முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்
 

17/2/13

இராட்சத விண்கல் பூமியில் விழாமல்,,,

  
சென்றது! தப்பியது பூமி!ரஷ்யாவின் யூரல் மாநிலத்தில் விண்கல் வெடித்துச் சிதறியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இதில் 200 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
வெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவில் விண்கல் வெடித்துச் சிதறிய போது கால்பந்து மைதானம் போல் காட்சி தரும் ஆஸ்ட்ராய்ட் 2012 டி.ஏ.14 என்ற பாரிய விண்கல் பூமிக்கருகே பூமியை கடந்து சென்றுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியை தாக்கும் என பலரும் கூறியதுடன் தொலை தொடர் புகள் அனைத்தும் சிதைந்து விடும் என்றும் எச்சரித்திருந்தனர். ரஷ்யாவில் விழுந்த எரிகல்லும், மேற்படிஎரிகல்லும் இரண்டும் எதிர்திசைகளில் பயணித்துள்ளன.
பூமியை கடந்து சென்ற விண்கல் அமெரிக்க பகுதிகளில் தென்படவில்லை. எனினும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தொலைநோக்கி மூலம் பார்த்துள்ளனர்.
பூமியை விண்கல் கடந்து சென்றதால் தப்பியது பூமி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எரிகல் பறந்து சென்றதில் உடைந்த ஜன்னல் கண்ணாடி சிதறல்கள் பட்டு பலர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்தோரின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து உலக மக்கள் மீள்வதற்குள், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கால்பந்து மைதான அளவு விண்கல் பூமிக்கு மேலே கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் கூறினர்.
வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மத்திய ரஷ்யாவின் யூரல் மலைப்பிரதேச பகுதியில் பிரமாண்ட எரிகல் தகதகவென எரிந்தபடி மிக மிக அருகில் பறந்து சென்றது. அந்த கல் வெடித்து சிதறியதில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், கடைகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. எரிகல் தீ ஜுவாலையுடன் பறந்த போது திடீரென சாலைகளில் கருமேகம் சூழ்ந்தது போலவும், திடீரென வானில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சியது போலவும் காணப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

14/2/13

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்


வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.