29/7/13

தந்தை தீயில் எரிந்து உயிரிழப்பு - பெல்மதுளை சம்பவம்


பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தில் 65 வயதுடைய ஒருவர் தீயில் எரிந்து இறந்தமை சம்பந்தமாக காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெல்மதுளை மெதபோபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. ஜே. சிங்கோ (வயது 65) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சனிக்கிழமை தீ மூட்டி எரிந்து இறந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இவர்களது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ தினத்தன்று வாடகைக்கு தங்கியிருந்தவருக்கும் இறந்தவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டு இரும்பினால் வாடகைக்கு தங்கியிருந்தவரை இறந்தவரை தாக்கியுள்ளார்.

வாடகைக்கு தங்கியிருந்தவர் பக்கத்து வீட்டிற்கு சென்று வருவதற்கிடையில் தீ மூட்டி எரிந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

18/7/13

பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை


26 மாத குழந்தை ஒன்றை கொலை செய்ததாக டொரண்டோவில் குழந்தையின் தாயாரும் அவருடைய வாழ்க்கைத்துணைவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Marleny Cruz என்ற 25 வயது பெண்ணும், Joel France என்ற 36 வயது ஆண் ஒருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் Marleny Cruz அவர்களின் 26 மாத குழந்தையும் இருந்தது. அந்த குழந்தைக்கு Joel France தந்தை அல்ல.
இருவரும் குழந்தையை சரியாக கவனிக்காமல் அவரவர் வேலையை மட்டும் செய்து வந்துள்ளனர். திடீரென குழந்தையின் முகம் நீல நிறத்தில் மாறியதால் பதட்டமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
ஆனாலும் சிகிச்சைக்கு பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து விசாரணை செய்த பொலிசார், குழந்தையின் மரணத்திற்கு அவர்கள் இருவரின் கவனக்குறைவே காரணம் என்பதை அறிந்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜூலை 23ம் திகதி வரை அவர்கள் இருவரையும் காவலில் வைக்கும்படி டொரண்டோ நிதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அவர்களை மீண்டும் ஓகஸ்ட் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
 

5/7/13

நீரோடையில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் பலி



கண்டியிலிருந்து கெக்கிரவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, தம்புள்ளைப் பிரதேசத்தின் நீரோடை ஒன்றில் விழுந்ததில் கடற்படைசிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது புதல்வி காயமடைந்துமுள்ளார்.
கெகிராவ ரனஜயபுர பாதுகாப்புப் படை குடியேற்றப் பகுதியில் வசிக்கும் சுனந்த பிரேமதிலக என்ற 35 வயதுடைய கடற்படை அதிகாரியே விபத்தில் மரணித்துள்ளார்.
தம்புள்ள பன்னம்பிட்டிய என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த புதல்வி, தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

4/7/13

காமலீலை புரிந்த அல்கொய்தா தலைவர்

 
யேமனில் கொல்லப்பட்ட அல் கொய்தா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய சென்றபோது ஆயிரக்கணக்கான டொலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர் அல் அவ்லாகி. அவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அவர் இஸ்லாம் குறித்து போதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். அவர் 2001ம் ஆண்டின் இறுதியில் இருந்து 2002ம் ஆண்டு துவக்கம் முதல் எஃப்.பி.ஐ. இன் கண்காணிப்பில் இருந்தார்.
அப்போது அவர் ஆயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்து விலை மாதுகளுடன் உல்லாசகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2002ம் ஆண்டு அவர் பென்டகனில் பேசவிருந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்பு கூட வொஷிங்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் 400 டொலர்கள் கொடுத்து ஒரு விலை மாதுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
வெர்ஜினியாவில் உள்ள பள்ளிவாசலொன்றில் இமாமாக இருந்த அவர் வாஷிங்டனில் விலை மாதுகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவர் வெளிப்படையாக அல் கொய்தாவுடன் தன்னை இணைத்துக் கொண்டதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் விலைமாதுகளுடன் இருப்பது குறித்து பல்வேறு அரச முகவர் நிலையங்கள் அவரிடம் விசாரணை நடத்தின
 

3/7/13

இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்பு


பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தால் க.பொ.த (சா.த) பரீட்சையில் 9ஏ சித்தி பெற்று உயர்தரத்தை மேற்கொள்ளுவதற்கு வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு மேற்படிப்பை தொடருவதற்கு உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தலா ஒரு மாணவிக்கு ரூபா 10ஆயிரம் ரூபா பெறுமதியான உயர்தரத்திற்கு தேவையாக புத்தகங்கள் அடங்கிய பொதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த  நிகழ்விற்கு வட இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி தேவராணி நவரத்தினம் அவர்கள் தலைமை வகித்தார். இதில் பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம சுவாமி சித்துருபானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளான கா.கீர்த்தனா, மு.வெண்ணிலா, இ.சுரேகா, சி.கோகிலா, ச.டிலோஜி ஆகியோருக்கு அன்பளிப்புகளை வழங்கி கௌரவித்தார்

வாயைப் பிளக்க வைத்த ஸ்மார்ட் கை கடிகாரம்

 
அப்பிள், கூகுள் என பல முன்னணி நிறுவனங்கள் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கை கடிகாரத்தை தயாரித்து வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன.
எனினும் அப்பிளோ, கூகுளோ இதுவரை அவ்வாறானதொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தவில்லை.
இந்நிலையில் பெரிய நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஸ்மார்ட் கடிகாரத்தை இந்திய மாணவர்கள் சிலர்  தயாரித்துள்ளனர்.
குறித்த ஸ்மார்ட் கடிகாரம் 'அண்ட்ரோய்ட்லி' எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் முற்றிலும் அண்ட்ரோய்ட் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.
இரண்டு அங்கு திரையைக் கொண்டுள்ளதுடன் 2 மெகாபிக்ஸல் கெமராவினை கொண்டுள்ளது.
புளூடூத், ஜி.பி.எஸ், 256 எம்.பி. ரெம்,  வை- பை, 8 மற்றும் 16 ஜிபி மெமரி என பல வசதிகளை இக்கைக்கடிகாரம் கொண்டுள்ளது.
இதன் விலை 150 பவுஸ்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், சிம் அட்டயை உபயோகிப்பதன் மூலம் இதனூடாக குறுந்தகவல் அனுப்புதல், அழைப்பினை மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.
இந்திய மாணவர்களின் தயாரிப்பிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,