3/2/13

பனையும் தமிழர் வாழ்வும்

'பனையும் வாழ்வும்’ என்ற கட்டுரையில் இருந்து கீழ் வரும் பந்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. “ வேனில் வெற்பில் கானங்காய முனையெழுந் தோடிய கெடு நாட்டாரிடைப் பனை வெளிறு அருந்து பைங்கண் யானை ” வேனிற் காலம் வெப்பத்தினால் காடுகள் அழிகின்றன. அக்காடுகளிலே குடியிருந்த மறவர்கள் எல்லோருமே குடியெழும்பிச் சென்றுவிட்டனர். இடமே பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கே யானைகள்தான் வாழுகின்றன. அவற்றிற்கும் உணவில்லை. அருகே வளர்ந்திருக்கும் பனைகள்தான் மிஞ்சியுள்ளன. உண்ணுவதற்குத் தழைகள் கிடையாமல் பசி முற்றிய யானைகள் பனையிலே உணவு காண்கின்றன. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும் பனைகளை முறித்துப் போடுகின்றன. வைரமான பனந்துண்டங்களை உடைத்து உள்ளிருக்கும் சோறினை உண்ணுகின்றன. பசியைத் தீர்க்க வலிய பனை மரத்தையே அழிக்கும் யானைகள் வலிமை பெரியது. பனை மரத்தின் உள்ளே இருக்கும் சோறு வெண்மையானது; ஈரலிப்பானது; அதனை யானைகள் உண்டு பசியாறுகின்றன. வரண்ட நிலத்திலே வளர்ந்து நிற்கும் பனைகள் மிருக உணவாகவும் பயன்படுவது புலவர் மனதைத் தொட்டுப் பாடலாயிற்று. பனஞ்சோற்றை உண்ட யானைகள் பசியாறித் தூங்கும் காட்சியையும் புலவர் காட்டுகின்றார். யானைகள் துயிலும் போது கையையொடுக்கிக் கொண்டு அசைந்த வண்ணமே துயிலும். அவை விடியற்காலத்திலே கடலில் பரதவர் தங்கியிருக்கின்ற தோணிகளைப் போலத் தோன்றுகின்ற பனைமரம் வளந்தரும் நிலையை சங்கப்பாடல் காட்டும் பண்பு இது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக